HotPicks

#interesting: அடப்பாவி பைய மக்கா! காண்டம், கருத்தடை மாத்திரைகளுக்கு கூட தடையா? அங்க என்னதான் நடக்குது?

Aug 01 2020

வட கொரியாவா..! சும்மா பெயரை கேட்டாலே அதிருது இல்ல! அப்படி ஒரு இராணுவ கட்டமைப்பு. வல்லரசு நாடுகளே பம்பி பயந்து கொண்டிருக்கும் அளவிற்கு கையில் வெயிட்டான வித்தை வைத்திருக்கும் நாடு. இங்குள்ள சில விதிமுறைகளை நம்மால் ஒருநாள் கூட பின்பற்ற முடியாது. அங்கு எப்படித்தான் மனிதர்கள் வசிக்கிறார்களோ? 

interesting-facts funny

முதலில் விரும்பிய ஆடையை கூட உங்களால் அணிய முடியாது. குறிப்பாக ப்ளூ ஜீன்ஸ் அணியவே கூடாது. அப்படி என்ன செய்ததோ நீலநிறம்.

interesting-facts funny

நமக்கு செல்போனை தயாரித்து வழங்கும், வட கொரியா மக்கள் பயன்படுத்தும் செல்போனில் இணையம் கிடையாது. ப்ளூடூத் கிடையாது. கம்யூட்டர் வைத்திருப்பார்கள். அதில் இன்டர்நெட் உண்டு. இதிலும் அயல்நாட்டு வெப்சைட் அனுமதி கிடையாது.

interesting-facts funny

அந்த நாட்டில் வெளிநாட்டினர் நிலம் வாங்க முடியாது. அது போலவே காரும் வாங்க முடியாது. வெகுஜன மக்கள் சைக்கிள் தான் ஓட்டுவார்கள். அதற்கும் நம்பர் ப்ளேட் உண்டு. அங்கு கார் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  

interesting-facts funny

நீங்க எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அந்த ஊரின் மதநூல்கள் அது தொடர்பான இலக்கியங்களை வாங்க முடியாது.

interesting-facts funny

வீட்டில் சூடான நீரில் கூட குளிக்க முடியாது. ஏனென்றால் அதற்கு வீட்டில் வசதிகள் கிடையாது. 

interesting-facts funny

கோகோ கோலா, பர்கர், ப்ரெஞ் ப்ரைஸ் போன்றவைகள் அங்கு சான்ஸே இல்லை.

interesting-facts funny

வெளிநாட்டு பயணம் வாய்ப்பே இல்லை ராஜா! 

interesting-facts funny

வெளிநாட்டினர் அங்கு போட்டோ எடுக்க கூடாது. குறிப்பாக உள்ளூர் ஆட்களோடு அனுமதியில்லாமல் பேச கூடாது. 

interesting-facts funny

அடுத்து காண்டம், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தவே கூடாதாம். எல்லாமே சுயகட்டுப்பாடு தான்.

interesting-facts funny

முடி கூட அந்த ஊர் மக்கள் அவங்க விருப்பத்திற்கு வெட்ட முடியாது. ஒரே டிசைன் தான்! இப்போ சொல்லுங்க! சொர்க்காமே என்றாலும், சொந்த ஊரை போல வருமா? பொழுது போக்கிற்கென அவர்களுக்கு நாம் பயன்படுத்தும் இணையம், டிவி என எதுவுமே கிடையாது. டிவியில் இருப்பதுவே மூன்று சேனல்களாகத்தான் இருக்கும். அதிலும் அந்த நாட்டின் அதிபரது பேட்டி தான் ஓடிக்கொண்டிருக்கும். மனுஷங்க என்ன செய்து தான் தங்களது பொழுதை கழிப்பார்களோ?