Out of Box

காரில் வருபவர்களுக்கு மட்டுமா க ரோனா தடுப்பூ சி? மீறி பேசினால் அ வமானப்படுத்தபடுவீர்கள்? தடுப்பூ சிக்கு கூட சிபாரிசு வேணுமா? நாகரீகம் பார்த்துக்கொண்டு வாய் திறக்காத படித்த வர்க்கம்!

May 31 2021 10:17:00 AM

நடிகர் விவேக் அவர்கள் இ றந்த ஆரம்பத்தில் தடுப்பூ சி போடவே எல்லோரும் ப யந்தார்கள். அரசு அதற்கும் இதற்கும் சமந்தம் இல்லை, வந்து ஊ சிபோட்டு கொள்ளுங்கள் என எவ்வளவோ அறிவுரை செய்தும் மக்கள் கேட்பதாக இல்லை. கொ ரோனோவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் இ றப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க எல்லோரும் தடுப்பூ சியை தேடி வந்து போட்டு கொண்டிருக்கிறார்கள். தற்போது ஊ சி கிடைப்பதும் பெரிய தட்டுப்பாடாக உள்ளது. எல்லோரை போலவும் நாங்களும் ஊ சி தேடி அலையும் படலத்தில் இறங்கினோம். எங்கள் ஊரை சுற்றியுள்ள சின்ன சின்ன கிராமங்களிலும் விசாரித்து வந்தோம். 

daily-life healthy-life-style

அப்படித்தான் ஒரு இடத்தில் ஊ சி போடுவதாக கேள்விப்பட்டு போனோம். அங்கு நேற்றுவரை ஊ சி போட்டதாகவும் இப்போது ஊ சி தீர்ந்துவிட்டதாகவும் கூறினார்கள். ஆனால் காரில் வந்த ஒரு பணக்கார கும்பல் கொ ரோனா ஊ சி போடும் இடம் எங்கு என கேட்டுக்கொண்டு, ஊ சி போட சென்றார்கள். இப்படியே காரில் சில கும்பல் வந்து சென்று கொண்டிருந்தது. பெரியவர் ஒருவர் உள்ளே சென்று வெளிவந்தார். அவரிடம் கேட்ட போது, அவர் ம ருத்துவர்களின் சிபாரிசு இருப்பவர்களுக்கும் பெரிய ஆட்களுக்கு மட்டும் தான் போடுகிறார்கள் என கூறினார். என்ன நடக்கிறது என உள்ளே சென்று விசாரிக்கலாம் என போனால், அங்குள்ள பெண் 'யார் சொன்னார்கள்? வா விசாரிக்கலாம் என புறநோ யாளிகள் 50 பேருக்கு முன்னர் நிறுத்தி, மரியாதை இன்றியும், யாரையோ பார்த்து யாரையும் உள்ளே விடாதே' என கத்தவே ஊ சி போட வந்த எங்களுக்கு அவமானமாக போயிற்று. 

daily-life healthy-life-style

இனி இந்த ஆ ஸ்பத்திரி பக்கமே வரகூடாது என கிளம்பிவிட்டோம். அம்மா க ழிப்பிடம் சென்று வருகிறேன் என சென்றவர் திடீரென அழைத்தார். க ழிப்பிடம் உள்ள பக்கம் மறைமுகமாக ஊ சிபோடுவதாகவும் கூறினார். சென்று பார்த்தால் பணம் படைத்தவர்கள், வெளியே நாங்கள் 8 மணியிலிருந்து காத்திருக்க காரில் வந்து ஜம்பமாக இறங்கியவர்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணிடம் விசாரித்தால் தாங்கள்  ஊசி போட வந்திருப்பதாக கூறினார். அப்படியே அந்த லைனில் நின்று கொண்டிருந்த போது, எங்களை 50 பேருக்கு முன்னர் வைத்து திட்டிய பெண்மணி எங்களை முறைப்பது போலவே பார்த்தார்.

daily-life healthy-life-style

ஊ சி போட்ட உடனே அப்படியே கிளம்பி வெளியே வந்தேன். மனம் ஒப்பவில்லை. மீண்டும் உள்ளே சென்று 'எதற்காக ஊசியை வைத்து கொண்டே இல்லை என சொன்னீர்கள்? காலை முதல் மதியம் வரை எத்தனை ஏழைசனம் வருகிறார்கள்? எல்லோரையும் ஏன் விரட்டினீர்கள்? நல்லவர் போலவே எதற்காக எங்களை 50 பேருக்கு முன் வைத்து சத்தம்போட்டு அ சிங்கப்படுத்தினீர்கள்? ம ருந்தை என்ன செய்கிறீர்கள்?' என கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினேன். அந்த பெண் என்ன சொன்னார் தெரியுமா?? 

daily-life healthy-life-style

நாங்கள் கோ விட் டியூட்டி பார்க்கிறோம். எங்களிடம் சத்தம்போடுகிறீர்கள்? என கூறி சுற்றி இருப்பவர்கள் எங்களை தவறாக நினைக்கும்படி அனுதாபமாக பேசினார்கள். நான் 'அக்கா, நீங்கள் எல்லோரும் கடவுளுக்கு சமம். உங்க காலில் கூட விழுகிறேன். ஆனால் எதற்காக ம ருந்தை வைத்து கொண்டு இல்லையென கூறினீர்கள்? அரசு ம ருத்துமனையில் எந்த காலத்தில் காரில் வந்து இறங்கி வைத்தியம் பார்த்து கொண்டார்கள்?' என மீண்டும் அதே கேள்வியை கேட்க, படித்தவர்கள் என்றாலே திமிரு தான் திட்டி அனுப்பிவிட்டார்கள். கேள்விகேட்டு நான் பு கார் சொல்ல போறேன் என சொன்னதால் எனக்கும் என் கூட வந்தவர்களுக்கும் ஊ சி போட்டார்கள். தடுப்பூ சி போடும்போது மனம் மிகவும் சாந்தமாக இருக்க வேண்டும். ஆனால் நான் ப தற்றத்துடன் பேசியதால் இத யம் உச்ச நிலையில் துடித்து கொண்டே இருந்தது. 

daily-life healthy-life-style

வரிசையில் நின்றவர்கள் எல்லோரும் பணம் படைத்தவர்கள், அதனால் எனக்காக ஆதரவாக பேச யாரும் இல்லை. மாறாக என்னை திட்ட மட்டுமே செய்தார்கள். சிபாரிசுகளின் பேரில் வந்து ஊ சி போட்டுக்கொள்ள வந்தவர்களா நேர்மையாக பேச போகிறார்கள்? நான் சென்ற பின், வரிசையில் என் தோழி நிற்கவே அங்கு நடப்பதை எல்லாம் கவனித்துள்ளார். அவள் சொன்னது இன்னும் தூக்கிவாறி போட்டது. ஏழை மக்கள் ஊ சி போட வந்தால், 'நீ அரசு ஊழியரா? அன்றாடம் எங்காவது பணி செய்கிறாயா? பால் போட போகிறாயா? இது போன்ற ஆட்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை' என்றவாறு சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

daily-life healthy-life-style

அதேநேரத்தில், கா வல் துறையில் பணிபுரியும் கான்ஸ்டபில் அம்மா ஒருவர் வந்து கேட்கிறார். அவருக்கும் 'சாரி மேடம் ஊசி இல்லை' என அனுப்புகிறார்கள். அன்றாடம் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர்களுக்காக தான் ஊ சி போடுகிறார்கள் என்றால், ஏன் அந்த கான்ஸ்டபில் அம்மாவிற்கும் ஊ சி போட்டிருக்க வேண்டியது தானே? சொல்லப்போனால் போலீஸ்காரர்களுக்கு தானே முன்னுரிமை தரவேண்டும்? அதை விடுத்து காரில் வந்து இறங்கியவகர்களுக்கும் பணக்கார மக்களுக்கும் எதற்காக முன்னுரிமை? காவல்துறையில் பணிபுரியும் நபர் வந்து கேட்டு, அவருக்கே ஊ சி மறுக்கப்பட்டு விட்டது என்றால் யாருக்கு தான் அந்த ஊ சி? தவறாக என்னமோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. 

daily-life healthy-life-style

எங்கு சென்றாலும் உதாசினம், சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கும் பொருள் கூட ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் போ ராடி தான் பெற வேண்டும் போல. இப்படியே சென்றால் நாளை நடுத்தர வர்க்கத்தின் அடுத்த தலைமுறை வாழ தகுதியற்ற இடமாக மாறும் தமிழ்நாடு. முன்னரெல்லாம் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்களை பார்த்தால், சொந்த நாட்டிற்காக உழை என அறிவுரை சொல்ல தோன்றும். இப்போதெல்லாம் நான் தான் தவறாக நினைத்து கொண்டிருக்கிறேனா என தோன்றுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், தவறு நடக்கும் இடங்களில் பத்தோடு பதினொன்றாக நிற்காமல் கேள்வி கேளுங்கள். ஏனெனில் அந்த ம ருத்துவமனையில் நடக்கும் சம்பவத்தை 100 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துக்கொண்டு மட்டும் தான் செல்கிறார்கள். யாரும் கேள்விகேட்கவில்லை. எதிர்த்தாலே எல்லாமே மாறும்! கூடவே பு காரும் செய்யுங்கள். படிக்காதவன் கூட கேள்விகேட்கிறான். படித்தவன் நாகரீகம் பார்த்துக்கொண்டு சும்மாவே நிற்கிறான். காசு சம்பாதிக்க மட்டுமா கல்வி, வாழ்வியலுக்கு இல்லையா?