Out of Box

இந்திய கிரிக்கெட்டில் ஜா திவெறி தலைவிரித்து ஆடுகிறதா? வார்த்தைக்கு வார்த்தை வக்கனையா பேசினா மட்டும் போதாது! வொர்ஸ்ட்ரா ரேய்!

Oct 06 2020 03:26:00 PM

எனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் என்பதால், அடிக்கடி விளையாட்டு செய்திகளை படிப்பதும், அது தொடர்பான வீடியோக்களை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படி பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், இடையில் வந்த ஒரு பதிவு ரொம்பவும் மனதை உறுத்தியது. இது தொடர்பாக எத்தனை பேர் பேசியிருக்காங்க என்று தெரியவில்லை. இருந்தாலும், நான் கேள்விப்பட்ட வரைக்கும் சொல்கிறேன். வட இந்தியாவை பொறுத்தவரையில், கிரிக்கெட், சினிமா போன்ற பொழுதுபோக்குகளில் ஜாதி பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறதாம்.

cricket ipl indian-team

உதாரணத்துக்கு ரோஹித் ஷர்மா என்கிறோம். அதில் "ஷர்மா" என்பது ஜாதிய பெயரை குறிக்கும். இதே போலத்தான் உமேஷ் யாதவ், மனிஷ் பாண்டே போன்ற பெயர்களும். எந்த இடத்திலும் அவர்கள் ஜாதியை விட்டுக்கொடுப்பதில்லை. விளையாட்டு எல்லோருக்கும் பொதுவானது, அதில் ம தம், ஜாதி சார்ந்த தலையீடுகள் இருக்கக்கூடாது என்றாலும், பெயரில் ஜாதியை இணைத்துக்கொள்வதால், அது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. இதில் தமிழகம் மட்டும் தனித்து நிற்பதை நினைத்து, பெருமைப்பட வேண்டும்.

cricket ipl indian-team

தமிழக வீரர்கள் யாரும் ஜாதி பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்வதில்லை. தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பெயரை எடுத்துக்கொண்டால், எந்த இடத்திலும் ஜாதிய அடையாளம் தெரியாது. தந்தை பெயர் பின்னொட்டாக சேர்க்கப்படுவதால், மகனின் வெற்றி தந்தைக்கும் பெருமை சேர்க்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநில வீரர்கள் ஜாதியை மட்டுமே தூக்கிப்பிடிப்பதால், அது ஒரு குறிப்பிட்ட இனத்தின் வெற்றியாக மட்டுமே பார்க்கப்படும்.

cricket ipl indian-team

இதனை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்றால், இரண்டு ட்விட்கள் போதுமானது. மேலே இருப்பது ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மாவின் டிவீட்டுகள். ஜடேஜா  தன்னுடைய ராஜ்புத் வம்ச பெருமையை போற்றுகிறார். ரோஹித் ஷர்ம, கோஹ்லி அனுஷ்கா திருமணத்திற்கு வாழ்த்திய பொழுது அனுஷ்கா தன்னுடைய பெயருக்கு பின் உள்ள சாதி பெயரை மாற்ற கூடாது என்று அறிவுறுத்துகிறார். இவ்வளவு தான் விஷயம். ஜாதியை தூக்கிப்பிடிப்பதால் வரும் மனநிறைவு என்றைக்குமே நிலைக்காது. ஒரு விளையாட்டு வீரனின் வெற்றி, அவன் மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.