Around me

உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி படுதோ*ல்வியை சந்திக்க இதுதான் காரணமோ?

Jun 28 2021 08:11:00 PM

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த பைனல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தட்டுத் தருமாறு விளையாடி வந்தது. இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆட்டம் ஆரம்பித்த நாள் முதலே மழை பெய்து வந்ததால் இந்திய அணி அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொள்ள முடியவில்லை.

india newzeland test final

ஏற்கனவே இங்கிலாந்து சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி தோற்கடித்து இருந்தது. இந்திய அணி தனது மிகச்சிறந்த 11 பேர் கொண்ட அணியை அழைத்துச் சென்று விளையாடியது. ஆட்டத்தில் விளையாடியவர்கள் 11 பெரும் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அனைவரும் தற்போது பார்மில் உள்ளார் என்றால் அந்த கேள்விக்கு பதில் இல்லை என்று தான் வரும். காரணம் சுபமன் கில் அனுபவம் இல்லாத வீரர். புஜாரா ஃபார்மில் இல்லை, பும்ரா, விராட் கோலி போன்ற எந்த வீரர்களும் சரியான பார்மில் இல்லை. அதே போல அனுமன் விகாரி போன்ற டெஸ்ட் அன்புமிக்க வீரர்களை இந்திய அணி அழைத்துச் செல்ல தவறிவிட்டது.

india newzeland test final

நியூசிலாந்து அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் கூட விளையாடவில்லை. ஆனால் இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் போன்ற 2 சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்திய அணி விளையாடியது. ஒருவேளை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களும் மீடியம் ஃபேஸ் பந்துவீச்சாளர்களை அழைத்துச் சென்றிருந்தால் இந்திய அணி வென்று இருக்கக்கூடும்.

india newzeland test final

நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெமிசன் பந்துவீச்சை இந்திய வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் இந்த மைதானத்திலேயே கடந்த 20 நாட்களுக்கு மேல் அதிக அளவு டிரெய்னிங் எடுத்து இருந்ததால் அவருடைய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்நம் இந்திய வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர். நம் இந்திய அணியில் இருந்து எந்த ஒரு பந்துவீச்சாளரும் எ*திரணி வீரர்களுக்கு ஒரு ப*யத்தை ஏற்படுத்தவில்லை.

india newzeland test final

இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று இருக்கவேண்டும் என்றில்லை, இன்னும் ஒரு 30 ரன்கள் சேர்த்து எடுத்து இருந்தால் கண்டிப்பாக ஆட்டம் டிராவில் முடிந்து இருக்கும். ஏனெனில் அன்று வெறும் 5 ஓவர்கள் மிஞ்சிய நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவை வென்றது. இன்னொரு 30 ரன்கள் சேர்த்து எடுத்து இருந்தாலோ அல்லது இரண்டு மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி எடுத்திருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் ஆட்டத்தை டிராவை நோக்கித்தான் எடுத்துச் சென்றிருப்பார்கள். மொத்தத்தில் ஒரு நல்ல அணியாக இருந்தும் சில தவறுகளால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுள்ளது.

india newzeland test final