Out of Box

விஜயை மட்டும் விரட்டுவது ஏனோ? எந்த பிடியிலும் சிக்காத தளபதி! ரெய்டில் கிரிக்கெட் மட்டையோடு வெளியேறிய அதிகாரிகள்!

Feb 17 2020

என்னப்பா..! எந்த பத்திரிகையை திருப்பினாலும் விஜய் போட்டோவா இருக்குது. ஏனுங்க டீக்கடைகாரரே! என்ன சேதி? 

நானும் உங்கள மாதிரிதான் அண்ணாச்சி, படத்தை பார்க்க மட்டும்தான் பேப்பர் புரட்டுவேன். அங்க பாருங்க கண்ணாடிக்காரர் வராப்டி. அவரை புடிங்க.

கண்ணாடிக்காரரே! வாங்க ஒரு டீ  குடிச்சுட்டு போவோம்.

அடடே! அண்ணாச்சியா?

ஆமாங்க..! கண்ணாடிக்காரரே! எந்த பத்திரிக்கை எடுத்தாலும் விஜயோட போட்டோவா  இருக்கு? கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்.

பேப்பர் எடுங்க பார்ப்போம். அட ஆமா! விஜய் வீட்ல ரெண்டு நாளா ரெய்டு நடந்திருக்கும் போல அதான் எல்லா பேப்பர்லயும் விஜயோட போட்டோ போட்ருக்கு அண்ணாச்சி!

எங்க வீட்டு கடைக்குட்டி வேற 'விஜயண்ணா விஜயண்ணானு' சுத்திக்கிட்டு இருக்கான்.  

உங்க வீட்டுல மட்டுமா அண்ணாச்சி! எங்க வீட்லையும் தானுங்க. பாருங்க! புதுசா ஏதோ படம் வந்துச்சே பிகில்னு, அந்த படத்தோட பாட்டு வெளியீட்டு விழானு சொல்லி என்பையன் போய் அடி வாங்கிட்டு வந்தான். 

அப்படியா? என்னாச்சு கண்ணாடிக்காரரே? 

ஆமாங்க அண்ணாச்சி!  கூட்ட நெரிசல்ல போலீஸ் கிட்ட அடி வாங்கிட்டு, அங்கங்க வீங்கிட்டு வந்தா. அவனோட அம்மாதான் பாவம்ங்க, புள்ளைய நெனச்சு அழுதுட்டே இருந்தா.

ஏனுங்க கண்ணாடிக்காரரே! விஜய விடவே ரஜினி அதிகமா சம்பளம் வாங்குற ஆளு தானே? அப்படி இருக்க ஏனுங்க விஜய மட்டும் துளைச்சு எடுக்கறாங்க?

அண்ணாச்சி! இளையதளபதிய பார்த்தீங்கன்னா, இப்போ நடிக்கிற படத்துல எல்லாம் கொஞ்சம் ஆளும் ஆட்சியை பங்கம் செய்யற காட்சிகள் அதிகம் இருக்கும். ரஜினி படத்துல அப்படியெல்லாம் எதுவும் இருக்காது. இந்த ஒரு காரணம் போதாதாங்க? சிஸ்டம் சரியில்லன்னு சொன்னதுக்கே மனுஷ பட்டப்பாடு. கருத்து சொல்லுங்கனு கேட்பாங்க, கருத்த சொல்லிட்டா மனுஷன் அவ்ளோதான்.

சரிதாங்க கண்ணாடிக்காரரே!

அதுமட்டுங்களா? பிகில் பட பாட்டு வெளியிடற நிகழ்ச்சியிலும் அரசு பற்றி கொஞ்சம் துடுக்கா பேசியிருப்பார் போல இளைய தளபதி. இதெல்லாம் பார்த்தா அரசியலுக்கு வரலாம்னு நினைச்சு அவரை பயமுறுத்த கூட ரெய்டு செய்திருக்கலாம். இல்ல  இவரோட பட வசூல் ரஜினி பட வசூலை விட மிதமிஞ்சுகிறதாம். விஜயோட இந்த அசுர வளர்ச்சி கூட ரெய்டிற்கு காரணமாக இருக்கலாம். 

ம்ம்ம்ம..! சரிதாங்க. விஜய் தம்பியும் சும்மா இல்லாம 'கம்முனு ஜம்முனு' ஏதோ சொல்லிவிட்றாரு. அதெல்லாம் கூட படத்துக்கு பலமா இருக்கலாம்.

அண்ணாச்சி! அதெல்லாம் தான் படத்துக்கு பலமே. நடிகர் சூர்யா கூட ஒருமுறை ஜாடையா காப்பான் பட நிகழ்ச்சியில 'இந்த மேடையை விளம்பரத்திற்காக பயன்படுத்தாதீங்க எங்க என்ன பேசணுமோ அங்க அதை பேசலாம்.அப்புறம் மக்கள் நாம போலியோனு பேச ஆரம்பிச்சுடுவாங்கன்னு' சூசகமா சொல்லியிருந்தாப்டி.

ஓஓ..! சரிங்க! விஜய் தம்பி வீட்டில நடந்த சோதனையில் என்னதான் கிடைச்சுதாம்?

இரண்டு கிரிக்கெட் மட்ட கிடைச்சுதாம்.

நிசமாங்க?

ஏனுங்க அண்ணாச்சி ! நான்  என்ன ரெய்ட பக்கத்துல இருந்தா பார்த்தே?  அதிகாரிங்க சொன்னதை சொல்றேன்.

அப்போ ஒன்னும் சிக்கலையா?

இல்லைங்க! 'பிகில் 300 கோடி வசூல்' கொடுத்துச்சுங்கற செய்தியை கேட்டு வந்த அதிகாரிகளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். 

     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top