Around me

இளையராஜாவின் மெட்டுக்கு பாட்டெழுத நீங்கள் தயாரா ? "என் மெட்டுக்கு பாட்டெழுதுங்க ரசிகர்களே!" ட்விட்டரில் தெறிக்கவிட்ட இளையராஜா

Nov 27 2021 07:08:00 PM

இந்தியாவின் மிக தலை சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இசை துறையில் மிகவும் புலமை பெற்றவர். 1976 இல் தமிழில் வெளியான 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது மற்றும் பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

ilaiyaraaja twitter

உலகம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காதல், சோகம், வேதனை, துக்கம் என  பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசைதான்இதுமட்டுமல்லாமல் பலரது இரவு நேர தாலாட்டு ராஜாவின் இசை என்றே சொல்லலாம். சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இளையராஜாவின் புகைப்படம்,  The Raaja of Music is Here என்ற வாசகத்துடன் இடம்பெற்றது. இது உலகம் முழுவதும் உள்ள இளையராஜாவின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் ஒருவரது புகைப்படம் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல, அது ஒரு கவுரவம். அது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

ilaiyaraaja twitter

 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் இளையராஜா. இவர் சமீபகாலமாக ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார், இந்த ட்விட்டர் மூலம் இவரது ரசிகர்களுக்கு தற்போது இவர் புதிய வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

 

 

ilaiyaraaja twitter

 அழகான மெட்டு ஒன்றை அமைத்து அதற்காக பாட்டு எழுதும் ஒரு பொன்னான வாய்ப்பை தன் ரசிகர்களுக்கு இளையராஜா வழங்கியுள்ளார். மேலும் அந்த மெட்டுக்கான சூழலையும் அவர் கூறியுள்ளார். " ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியை அல்லது காதலனை சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மன நிலையை கொண்டு பாடல் வரிகளை எழுதுமாறு" இளையராஜா கூறியுள்ளார்.

மேலும்  இந்த பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பாடலை அவர் ஏதேனும் படத்துக்கு பயன்படுத்த போகிறாரா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.