Out of Box

விபச்சாரம் செய்யும் பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது, போலீஸ் ரெய்டு வந்தால் என்ன நடக்கும்? காசு கொடுத்து கண்டத்தை விலைக்கு வாங்க வேண்டுமா? பிறகு உங்க இஷ்டம்!

Jan 07 2022 07:08:00 AM

ஒரு காலத்தில் திரை மறைவில் நடந்துகொண்டிருந்த வி பச்சா ரம், இன்னைக்கு வெளிப்படையா வாட்ஸ்ஆப்பில் பேசி டீல் முடிக்கும் அளவுக்கு சர்வ சாதாரணமா நடக்குது. 25 வயதை கடந்தவர்களை குறி வைத்து செய்யப்பட்ட காலம் எல்லாம் போயாச்சு. ஒரு காலேஜ் பையன், "மச்சா கல்யாணத்துக்கு முன்னாடி, ஒருமுறை போய் டிரையல் பார்த்துட்டு வரலாம்" என்று அவனுடைய நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், எல்லா உதாரித்தன விஷயங்களும் எளிதில் பரவி விடுகிறது. இன்னும் கொஞ்சம் நாள் போனால், பள்ளி மாணவர்கள் கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கலாம்.

police raid lodge

ஊர் ஊருக்கு மசாஜ் பார்லர்கள் வைத்து, தனி அறையில் இந்த மாதிரி சமாச்சாரங்களையும் செய்கின்றனர். இவங்களுக்கு தனியா புரோக்கர்கள், கமிஷன் ஏஜெண்டுகள், சமூக வலைதள மேனேஜர்கள் என, கிட்டத்தட்ட கார்பரேட் செட்-அப்பில் பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. என்ன தான் திட்டம் போட்டு, தொழில் செய்ய நினைத்தாலும், இங்கே வி பச்சாரத்தி ற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. அதனால் தான், அவ்வப்போது, லாட்ஜ்களிலும், மசாஜ் பார்லர்களிலும் ரெய்டு நடந்து, வடமாநில பெண்களும், நேபாள பெண்களும் கைது செய்யப்படுகின்றனர்.

police raid lodge

இந்த கைது நடவடிக்கையால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, கொஞ்சம் கமிஷனை அள்ளி வீசினால், மீண்டும் வெளியே வந்துருவாங்க. பிறகு வேறு ஊருக்கு தொழிலை மாற்றி, அங்கும் புது பெயரில் பிசினஸ் நடந்துகொண்டே தான் இருக்கும். அவங்களுக்கு முடிவுகட்ட முடியாது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், போலீஸ் ரெய்டு வரும் போது, உள்ளே சிக்கிக்கொள்ளும் கஸ்டமர்களின் நிலை என்னவென்பது தான். எப்போது போலீஸ் ரெய்டு வந்தாலும் அதை நடத்துபவர்கள் முதலில் மாட்டிக்கொள்வார்கள்.

police raid lodge

ஆனால், விபச்சாரம் செய்யும் பெண்ணிடம் கஸ்டமர்களாக சென்ற ஆண்கள், விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கோ பெற்றோருக்கோ விஷயம் தெரிய வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் காவல் துறையினரிடம் நீங்கள் சட்டத்தை பேச இயலாது. எதிர்த்து என்ன கேட்டாலும், கோர்ட்டில் பேசிக்கோங்க, இப்ப ஸ்டேஷனுக்கு வாங்க என்பார்கள். அப்போது என்ன செய்ய முடியும்? நண்பரையோ, வீட்டில் உள்ளவர்களையா எதை சொல்லி உதவி கேட்பீர்கள்? அகப்பட்டால் அஷ்டமசனி தான்.