HotPicks

இட்லி சாப்பிட மாட்டேன் என்று குழந்தை அடம் பிடிக்கிறதா? இப்படி மட்டும் செஞ்சி பாருங்க! வேண்டாம் என்று வெ றுத்து ஒதுக்கிய இட்லியை சப்பு கொட்டி சாப்பிடுவாங்க!

Jan 13 2022 01:20:00 PM

இட்லி நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் மிக முக்கியமான காலை சிற்றுண்டியாகும். காலை நேரத்தில் நாலு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தான் பலரும் அலுவலகத்துக்கு செல்வர். அதேபோல இரவிலும் பெரும்பாலான வீடுகளில் இட்லி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் பலருக்கும் நீராவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் இட்லியை விட எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென தயாரிக்கப்படும் தோசையே பிடித்த உணவாக இருக்கிறது.

idly-upma pepper-idly idly-variety-home-cooking

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்காக தோசை சுட்டு ஊட்டிவிடுவார்கள். அது தவறில்லை என்றாலும் எப்போதும் தோசை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா? இட்லியும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அம்மாவுக்கு கொஞ்சம் சிரமத்தை குறைக்கலாம் அல்லவா? உங்கள் குழந்தைகளை இட்லி சாப்பிட வைக்க நம்மகிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு.

idly-upma pepper-idly idly-variety-home-cooking

இட்லியை அப்படியே கொடுத்தால் தானே வேண்டாம் என்று குழந்தைகள் வெ றுத்து ஒதுக்குகின்றனர். இட்லியை வேற மாதிரி மாற்றிவிட்டால் அவர்கள் கட்டாயம் அதை விரும்பி உண்பார்கள். இது கொஞ்சம் காமெடியாக தெரியலாம். இருந்தாலும் என் அனுபவத்தில் இதைத்தவிர சிறந்த வழி இருப்பதாக தெரியவில்லை. இட்லியை தயார் செய்து முடித்ததும் அதை கொஞ்ச நேரம் ஆற விடுங்கள். அல்லது அதை அடுத்த நாள் வரைக்கும் கூட வைத்திருக்கலாம். ஆறவைத்த இட்லி அல்லது ஒரு நாள் பழைய இட்லியை சிறு  சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் இட்லிகளை போட்டு கிளறி விடுங்கள்.

idly-upma pepper-idly idly-variety-home-cooking

சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அந்தக்கலவையை தட்டில் பரிமாறுங்கள். சுவையாகவும், மணமாகவும் இருக்கும் இட்லி உப்புமா இப்போது தயார் ஆகி விட்டது. மஞ்சள் தூள் சேர்ப்பதற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்த்து, பச்சை மிளகாயை நறுக்கிப்போட்டால் அதை பெப்பர் இட்லி என்று கூறலாம். பல பெரிய ஹோட்டல்களில் இப்படித்தான் இட்லியை வேறு மாதிரி தயாரித்து நம்மை அசர வைக்கின்றனர். இந்த ஐடியாவை வீட்டில் முயற்சி செய்து பார்த்தால் உங்க குழந்தைகள் கண்டிப்பாக இட்லியை வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க.

idly-upma pepper-idly idly-variety-home-cooking

இவ்வளவு சிரமப்பட்டு இட்லி உப்புமா அல்லது பெப்பர் இட்லி தயார் செய்வதற்கு பதிலாக இரண்டு தோசை சுட்டுவிட்டு போகலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கும். இருப்பினும் இந்த முறையில் இட்லியை தயார் செய்து கொடுப்பதால் அது ஒரு புதுவிதமான உணவாகவும் இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.