Hugs & Kisses

வேலைக்கே போகாமல் மனைவியின் வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தும் கணவராக இருந்தால் குடும்பம் எப்படி இருக்கும்? தெறிக்கவிட்ட தோழி!

Sep 14 2020 02:13:00 PM

என்னுடைய நண்பனின் நீண்ட நாள் கனவு இது. மச்சா! உழைச்சு உழைச்சு என் வாழ்க்கை மோசமா போச்சுடா! வீட்டோட மாப்பிள்ளையாகும் வாய்ப்பு கிடைத்தால், கோடி கும்பிடு போட்டு காட்டிக்குவேனென்று மனதார கூறுகிறான். அவனுக்கு சுற்றி இருக்கும் சூழ்நிலை அப்படி, சப்போர்ட்டுக்கு ஒருத்தரும் கிடையாது. ஆனால் எல்லா நேரங்களும் வீட்டோட மாப்பிள்ளை பிளான் வொர்க்-அவுட் ஆகாது. சில நேரங்களில் வெளியூருக்கு போக வேண்டிய தருணமும் வரலாம். அங்கும் ஒரு சிலருக்கு இல்லத்தரசனாகும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

house-husband wife husband

என் நண்பர் ஷேர் மார்கெட்டிங்கில் ஈடுபட்டுவருகிறார். திருமணம் நடந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவருடைய மனைவி இரயில்வே வேளையில் இருப்பதால், அடிக்கடி ஊர் விட்டு ஊர் பயணிக்க வேண்டி இருக்கும். நண்பருக்கு எந்த சிரமும் கிடையாது. காலையில் மனைவி வேலைக்கு கிளம்பிய பிறகு, லேப்டாப் எடுத்து உட்கார்ந்தால், மாலை அவர் வீட்டிற்கு வருவதற்குள், எல்லா வேலைகளையும் முடித்து விடுவார். இடையில் வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கப்பட்டு விடும்.

house-husband wife husband

மனைவி வேலைக்கு போக, கணவர் வீட்டை கவனித்துக்கொள்ள, கேட்கவே ஆனந்தமா இருக்குல? நண்பருக்கு ஷேர் மார்கெட்டிங்கில் வருமானம் வருவதால் தப்பித்தார். இதுவே எந்த வருமானமும் இல்லாமல் இருந்திருந்தால்.? அப்படி இருந்தாலும், எந்த சிக்கலும் வந்திருக்காதுங்க. மனைவிக்கு வருமானம் அதிகம். நண்பருக்கு திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இருவருக்குள் நல்ல புரிதலும், மிதம் மிஞ்சிய காதலும் இருப்பதால், எதுவுமே தவறாக தெரியவில்லை.

house-husband wife husband

ஒரு முறை அவங்க வீட்டுக்கு போனப்ப கூட, "எங்க மாமாவ நான் பேபி மாதிரி பார்த்துக்குவேன்" என்கிறார் நண்பரின் மனைவி. இதெல்லாம் கேள்விப்பட்ட பிறகு, நமக்கும் இப்படி நடந்தால்..? என கனவு உலகில் மிதக்க கூடாது. அவங்க குடும்பத்தில் ஒருவர் பொருளாதார ரீதியாக குடும்பத்தை தாங்கி நிறுத்தும் அளவுக்கு வலுவாக இருக்கிறார். ஒருவர் குடும்பத்தை எப்படி பாசத்துடன் வழி நடத்த வேண்டுமோ அதில் கண்ணும் கருத்துமாக இருப்பதால், நிறைவான வாழ்க்கை வாழ முடிகிறது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அளவான வருமானம் இருந்தாலும், மனதுக்கு பிடித்த வாழ்க்கை வாழ்ந்தால் போதும். அடுத்தவர் போல வாழ வேண்டாம்.