HotPicks

இடியே விழுந்தாலும் உள்ளே இருப்பவருக்கு ஒன்றுமே ஆகாது! இப்படி ஒரு வாகனத்தை ஏன் யாரும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை?

Jul 21 2021 10:03:00 PM

இந்த வண்டி மட்டும் உங்க கிட்ட இருந்தாபோதும், எவ்வளவு பெரிய வி*பத்து நடந்தாலும் உங்களுக்கு ஒன்றுமே ஆகாது! ஏன்? இடியே விழுந்தாலும் ஒன்றும் ஆகாது.  சந்தைகளில் தற்போது நூற்றுக்கணக்கான வண்டிகள் வித்தியாச வித்தியாசமான பெயர்களில் வந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பம்சத்தை கொண்டுள்ளன. அதற்கேற்றபடி அதிக விலையையும் கொண்டுள்ளன. ஒரு வண்டியின் விலை ஆனது, அது தரும் பாதுகாப்பையும் நீண்ட நாள் நிலைப்புத்தன்மையையும் வைத்து தான் முடிவு செய்யப்பட வேண்டும். 

udhayanidhi-stalin hummer-car

ஆனால் இப்போது நிலைமை மாறி வண்டியின் டிசைனைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பாதுகாப்பிற்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த ஒரு வண்டி மட்டும் தான் பாதுகாப்பில் no.1 என்ற கர்வத்தோடு நிற்கிறது.

udhayanidhi-stalin hummer-car

அது தான் நம்முடைய ஹம்மர். எப்படிப்பட்ட வி*பத்து நடந்தாலும் காரின் உள்ளே இருப்பவர்களுக்கு ஒன்றுமே ஆகாது. ஒரு ஹம்மர் நம்ம மீது மோதினாலும் நாம் ஹம்மர் மீது மோதினாலும் இழப்பு நமக்குதான். வண்டி பார்ப்பதற்கு நல்ல யானை போல பெரியதாகவே உள்ளது. எனவே தாராளமாக 5 முதல் 6 பேர் வரை பயணம் செய்யலாம்.

udhayanidhi-stalin hummer-car

General Motors ராணுவத்துக்கு வண்டி தயார்செய்யும்போது மக்களுக்கும் ஒரு வண்டி செய்து விடலாமே என்று நினைத்து உருவாக்கப்பட்டது தான் ஹம்மர். high mobility multipurpose wheeled vehicle என்பதன் சுருக்கமே ஹம்மர் ஆகும். பெரிய பெட்ரோல் டேங்க்  இருக்கும். அதனால் அதிகமாக பெட்ரோலை குடிக்கும். மேலும் இதன் பம்மெர் மிக உறுதியாக இருக்கும். எங்கே சென்று மோதினாலும் ஒன்னும் ஆவதில்லை. 

udhayanidhi-stalin hummer-car

காடு, மலை எந்த இடமாக இருந்தாலும் வண்டியை ஸ்மூத்தாக ஓட்டிச்செல்லலாம். ஆனால் பெட்ரோல் எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இறங்கியெல்லாம் இதனை தள்ள முடியாது. இது 4500 கிலோ எடை கொண்டது. இருந்தாலும் 4500பவுண்டு வரை இழுத்துச் செல்லும். இதன் சிறப்பம்சமே வண்டி பஞ்சர் ஆனாலும் ஓடிட்டே இருக்கும். ஏனெனில் இதன் டயர்கள் மிக உறுதியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக வேகத்தில் செல்ல முடியாது. எனவே இது சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படவில்லை.

udhayanidhi-stalin hummer-car

எனவே 2009ல் அந்த நிறுவனமே இதை தயார் செய்வதை நிறுத்திவிட்டது. ஆனால் கூடிய விரைவில் இதை மின்சார வண்டியாக வெளியிடுவோம் என கூறியுள்ளது. ஹாலிவூட் நடிகர் அர்னால்டுக்கு ஹம்மர் தான் பிடித்த வண்டியாம். அவர் மட்டும் அல்ல தோனி, ஹர்பஜன் சின் ஆகியோரும் இந்த வண்டியை வைத்துள்ளனர். ஏன் நம்ம உதயநிதி வைத்துள்ளார். ஒரு ஹம்மர் கார் வாங்கும் காசுக்கு பத்து யானையை வாங்கி விடலாமாம். அந்த அளவுக்கு காஸ்லியான வாகனம்.