Out of Box

ஆண்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்த இரகசியத்தை சொன்னதுக்கு, பெண்கள் கூட்டம் என்னை அடிக்க துரத்திகிட்டு வராங்க! ஆணினமே, காலவாரி விட்ராதீங்க!

Jan 05 2022 03:02:00 PM

ஒரும் 30 நொடிகள் கண்ணை மூடி, ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்குமென்று யோசித்துப்பாருங்க. கண்டிப்பா, இடையிலேயே குழப்பம் வந்துவிடும். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் ஆண்களின் பங்களிப்பு இருக்கு. ஆனால் ஒரு பெண் இல்லையென்றால், ஆண் இனமே உருவாக முடியாதுன்றது வேற விஷயம். இப்போதைக்கு நாம் எடுத்துக்கொண்ட டாப்பிக் ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? என்பது தான். பெண்களுக்கு ஒரு விதமான விசித்திர போட்டி மனநிலை இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். சின்ன பிரச்சினைகளைக்கூட பெரிதாக்குவார்கள்.

men women world-without-men

அந்த குணத்தை வைத்து பார்த்தால், தன்னை விட சிறப்பாக ரங்கோலி கோலம் போட்ட அண்டை நாட்டு பெண் மீது, போர் தொடுக்கும் நிலை வரலாம். ஐ.நா சபையில் தான் அணிந்து வந்த அதே நிறத்தில், இன்னொரு நாட்டு பெண் தலைவரும் ஆடை அணிந்து வந்தால் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும். உலகம் முழுக்க சுத்தமாக இருக்கும். இதனை மறுக்க முடியாது. ஏனென்றால் பெரும்பாலான பெண்கள் தோற்றம் மற்றும் சுய சுகாதாரம் பற்றி அறிந்திருக்கிறார்கள். அடுத்து அன்பைக் கொண்டு சிலர் ஏமாற்றப்பட்டிருக்கமாட்டார்கள். ஏமாற்றியும் இருக்கமாட்டார்கள்.

men women world-without-men

என்னதான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா துறைகளிலும் துணிந்து நின்றாலும், ஆண்களின் அரவணைப்பு கட்டாய தேவையாக உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு வகையில் ஆண்களின் அரவணைப்பையோ, அன்பையோ பெண் தேடிக்கொண்டே இருக்கிறாள். ஆண் இல்லாமல் போனால் பெண்ணடிமை இருக்காது, விபச்சாரம் ஒழிந்திருக்கும், அழகுசாதன பொருட்கள் விளம்பரமே வராது. பெண்களுக்கு தங்களை அழகு படுத்திக் கொள்ளும் எண்ணம் குறைந்து விடும். ஐந்தில் மூன்று பெண்கள் ஆண்களுக்காக தான் அலங்காரம் செய்துக் கொள்வர்.பொம்மை கடைகள் எல்லாம் நஷ்டத்தில் இருக்கும். பொருளாதாரம் உட்பட எல்லாமே ஒரு மந்த நிலையில் தான் இருக்கும்.

men women world-without-men

என்னதான் ஆண்கள் இல்லாத உலகம் சொர்க்கம் என பெண்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும், ஆண்கள் இல்லாத ஒரே வாரத்தில் உலகம் அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். அதேபோல பெண்கள் இல்லாத உலகமும் நல்லா இருக்காது. ஆண்கள் இல்லை என்றால், பெண்கள் ஊசி போட்டுக்கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆண்களால் அதுகூட முடியாது. சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவன் இல்லை.