Misc

#Cute: அடிச்சு புடிச்சு வீடு போய் சேர்ந்தாச்சு! வீட்டுக்கு போனதும் நீங்கள் செய்ய வேண்டியது!

Mar 25 2020

எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு பயணம் செஞ்சிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். தவிர்க்க முடியாத சூழல் எல்லாரையும் இந்த நிலைக்கு தள்ளிடுச்சு. வீட்டுக்கு போனதும் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் மருத்துவர் அரவிந்த் ராஜ்.

corona corona-precaution corona-test travel-corona

#1. வீட்டு கதவை உங்கள் இடது கை (Non-Dominant) அல்லது முழங்கை (Elbow) கொண்டு திறக்கவும்.

#2. வீட்டிற்க்கு சென்ற உடன் நேராக குளியலறை சென்று நன்றாக சோப்பு போட்டு குளிக்கவும்.

#3. உங்கள் துணிமணிகளை அப்படியே கிடாசாமல் நீங்களே துவைக்க வேண்டும்.

#4. வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் தள்ளியிருங்கள். உங்களிடம் இருந்து அவர்களுக்கு கிருமித்தொற்று பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதை செய்வோம்.

#5. உங்கள் செல்போன்களில் கிருமிகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, குழந்தைகளிடம் செல்போன் குடுக்க வேண்டாம்.

#6. அம்மாவிடம் வீட்டை 'Lysol' போட்டு சுத்தம் செய்ய சொல்லவும்.

#7. இவை அனைத்தும் முடிந்த பின் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

#8. நண்பர்களை பார்க்க செல்கிறேன் என்று எங்கும் செல்ல வேண்டாம்.

#9. எந்த பொருட்களிலும் தேவையில்லாமல் கை வைக்க வேண்டாம்.

#10. வீட்டில் இருப்பவர்களிடம் சீரான இடைவெளியான 1 மீட்டர் இடைவெளி விட்டு இருங்கள்.

#Cute: வீட்டுக்கு போய் எத்தனை நாள் ஆகியிருந்தாலும் சரி, ஒரு இரண்டு வாரத்திற்கு வீட்டில் இருப்பவர்களின் நலன் கருதி கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.