His & Her

தலுக்கு முலுக்குன்னு ஊறிப்போன ச தை! அளவுக்கு மீறி பெருத்துப்போன பின்னழகை எப்படி குறைக்கலாம்? பிட்டக் கொழுப்பை கரைய வைக்கும் சின்ன வேலை!

May 13 2021 11:10:00 PM

ஆண்களுக்கு முன் பக்கம் சதை ஏறி தொப்பை போடுகிறது என்றால், பெண்களுக்கு பின்பக்கம் சதை கூடி, பிட்ட பகுதியிலும், இடுப்பை சுற்றிலும் கொழுப்பு ஏறிவிடுகிறது. பின்புறம் சதை கூடுவது ஒரு லிமிட் வரை இருப்பின், அது தனி அழகை கொடுக்கும். அதுவே லிமிட் தாண்டி, கூடிக்கொண்டே போனால், பார்க்க அசிங்கமா இருப்பதோடு, நடக்கவும் சிரமமா இருக்கும். நாலு எட்டு வைத்து வேகமாக நடக்க முடியாது. ஏதோ தொடையை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு வரும். இதெல்லாம் பின்பக்க சதை கூடிய பெண்கள் அனுபவித்து வரும் வேதனை.

back fat hip

"வயிற்றில் அடித்தால் கொழுப்பு அடங்கும்" என ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதிகமாக இனிப்பு, புளிப்பும் சாப்பிடுவது நிறுத்தினால் கொழுப்பு தன்னப்போல குறைந்துவிடும். புளிப்பும், இனிப்பும் அதிகம் எடுத்துக்கொண்டால் அது வயிற்று பசியை அதிகரிக்கும். பிறகு வயிற்றுப் புண்ணை உண்டாக்கும். பிறகு எல்லா நோய்களும் வரக்காரணமாகி விடும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதில், உணவுக்கு தான் முக்கிய பங்கு உண்டு. உடற்பயிற்சி எல்லாம் இரண்டாம் பட்சம்.

back fat hip

கொஞ்சம் கொஞ்சமாக மாவுச் சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக்கொண்டு, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். தினமும் ஒருவேளை அரிசி சாதம் சாப்பிட்டு, மற்ற வேளைகளில் காய்கறி, பழங்களை பசிக்கும் போது எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு நாளுக்கு 100 கிராம் அளவு கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக்கொண்டால் போதுமானது. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பழகுங்கள். இந்த கட்டுப்பாட்டுடன், ஒரே ஒரு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.

back fat hip

இந்த உடல் பயிற்சிக்கு பர்பீஸ் என்று பெயர். மேலே உள்ளதைப்போல செய்வது, மிக சிறந்த உடற்பயிற்சி. குறுகிய நேரத்தில் அதிக பலனளிக்கும். பார்க்க சூர்ய நமஸ்காரம் போல இருக்கும். ஆனால் 8 செய்தாலே மூச்சு வாங்கும். அதனால் ஒரு நாளில், பல நேரங்களில் எட்டு, எட்டாக பிரித்து செய்யலாம். இவையெல்லாம் செய்யும் போது, நொறுக்கு தீனி மற்றும் ஹோட்டல் உணவுகள் தவிர்த்தால், பூசணிக்காய் போல சதைபோட்ட பிட்டங்கள், ஆப்பிள் பழம் போல இளகிவிடும்.