Hugs & Kisses

சின்னவீடு சிங்கி அடிச்சிரும்! ஆணைப்போல பெண்ணும் பல திருமணம் செய்தால் என்ன ஆகும்? கொஞ்சம் சூதானம் ஜீ!

Sep 15 2020 05:44:00 PM

பண்டைய காலத்தில் ஒரே பெண்ணை இரு சகோதரர்கள் திருமணம் செய்து கொண்டதாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஏன் நேபாளத்தில் கூட இப்போதும் இந்த வழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. 

tamil-bridal romance

படத்தில் கூட ஒரு ஹீரோ இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவார், ஒருவருக்கொருவர் தெரியாமல் பார்த்துக்கொள்வார். இப்படி படம் எடுத்தால் ரசிக்கிறோம். இதே போல ஹீரோயின் இரண்டு கணவன்களுடன் ஒருவருக்கொருவர் தெரியாமல் காதலித்தாலே ஒத்துக்கொள்ள மாட்டோம். இப்படி படம் எடுத்தாலும் அது இங்கு மண்ணை கவ்வும்.

tamil-bridal romance

படத்தில் என்ன? நிஜ வாழ்க்கையிலே பல ஹீரோக்கள் இரண்டிற்கும் மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்து, பிடிக்கவில்லை என பிரிந்த கதைகளை பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் அந்த ஹீரோக்களின் வெற்றி பயணம் அதோடு நிற்பதில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஹீரோயின்கள் இதே செயலை செய்தால், அவர்களை வசைபாட கிளம்பிவிடுகிறது ஒரு கூட்டம். சமீபத்தில் கூட நடிகை வனிதா மறுமணம் செய்து கொண்டதற்கு, அவருக்கு எத்தனை அர்ச்சனைகள் சோசியல் மீடியா பக்கம்!

tamil-bridal romance

கணவரை இழந்த இளம் பெண் பூ, பொட்டு வைத்திருந்தாலே, இவள் இன்னொரு கல்யாணத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறாளோ? என சந்தேகிக்கும் சமுதாயம், சரியான துணை அமையவில்லை என கணவரை விவாகரத்து செய்து மருமணத்திற்கு தயாரானால் சும்மா இருக்குமா? 

tamil-bridal romance

கவுரவ கொ லைக்கு தனது காதல் கணவனை இழந்த கவுசல்யா, அதிலிருந்து மீண்டு மறுமணம் செய்த போது, அதற்குள் இன்னொரு கல்யாணம் கேட்குதா? என எத்தனை வாய்கள் சமூக வலைத்தளங்களில் வசைபாடின. 

tamil-bridal romance

சமீபத்தில் கணவரால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் நடுரோட்டில் தீ குளிக்கும் வீடியோ வைரலானது. அந்த பெண் இ றக்க முற்படுவதை பார்த்து அங்குள்ள மக்கள் சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். வீடியோவை பார்த்து சில நொடிகள் வருத்தப்பட்டுவிட்டு சலனமின்றி கடந்து செல்லும் மக்கள், நடிகை வனிதா, கவுசல்யா போன்றோர் மறுமணம் செய்யும் போது மட்டும் சலனமின்றி கடந்து செல்ல முற்படுவதில்லை.

tamil-bridal romance

அப்படியானால் பெண்கள் க ள்ளக்காதல் வைத்துக்கொள்ளலாமா, பல திருமணம் செய்யலாமா? என கிளம்பி விடாதீர்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஒரு உறவில் இருக்கும் போது அந்த உறவை ஏமாற்றி கொண்டு, மற்றொருவருடன் உறவில் இருப்பதை எந்த சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது. இருவருக்கும் ஒத்து வரவில்லை என்றால் மனதார பிரிந்து சென்று விடுவது நல்லது. அதை தான் நமது சட்டமும் சொல்கிறது. 

tamil-bridal romance

எனது கேள்வி எல்லாம் ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணம் செய்து பிடிக்கவில்லை என மறுமணம் செய்யும் ஆண்களை புது மாப்பிள்ளையாக பார்க்கும் அளவிற்கு பக்குவப்பட்ட உலகம், மறுமணம் செய்யும் பெண்களை புது பெண்ணாக கொண்டாடுவதில்லையே?