Hugs & Kisses

#happy: ஆணுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லையெனில் மனைவியின் நிலை என்னவாகும்?

Jul 31 2020

இன்றுவரை நமது பகுதிகளில் பெண்கள் தாம்பத்தியம் குறித்து வெளிப்படையாக பேச முடியாது. தோழிகளுடன் மறைமுகமாக பேசிக்கொள்ளவார்கள். அப்படி பேசிக்கொள்ளும் போது, பெரும்பாலும் 'அவருக்கு ஆர்வம் இல்லை, என்னிடம் தான் குழந்தை எப்போன்னு வீட்டில் உள்ள பழசுங்க  கேட்கிறார்கள்' என எப்போதாவது மனம் விட்டு புலம்புவார்கள். தோழிகளும் அப்படி பேசு, இப்படி நடந்துக்கோ என தங்களுக்கு தெரிந்த தந்திரங்களை எல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள்.

happy happy-life-style

இந்த விஷயத்தில் ஆணுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லையெனில் மனைவியின் நிலை என்னவாகும்? தாம்பத்தியம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட பரிசு. ஆணுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லையெனில் மனைவியின் விரக தாபம் கேள்விக்குறியாகும். பெண் இல்லாத ஆண் வாழ்க்கை அதேபோல ஆண் இல்லாத பெண் வாழ்க்கை நரகமே. 

happy happy-life-style

இந்த விஷயத்தில் பெண் தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என்றால் அது அந்த பெண்ணிற்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லாத ஆணோ பெண்ணோ இருக்க முடியாது. உடல் பிரச்சனை அல்லது வெளிதொடர்பு போன்ற காரணத்தால் மனைவியை தவிர்த்து வரலாம். இந்த நிலையில் இருவரும் நல்ல மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. 

happy happy-life-style

மனைவி நச்சரித்து கொண்டே இருக்கிறார் என கணவன்மார்கள் சிலர் தங்களது அனுபவத்தை பேச்சிலரிடம் கூறும்போது, அவர்களுக்கு கல்யாண வாழ்க்கை மீது வெறுப்பு வர வாய்ப்புண்டு. அதுவே பெண் மீது வெறுப்பை உண்டாக்கி தாம்பத்திய நாட்டத்தையும் சீர்குலைத்துவிடும். பெண் என்பவள் சுகமாக சுமை அதை ஏற்றுக்கொண்டு சுகமாக சுமக்க கற்றுக்கொண்டால் மட்டுமே வாழ்வு இனிக்கும். 

happy happy-life-style

கணவரை நேசித்து விட்டேன் என எண்ணும் பெண்ணாக இருந்தால், கணவனின் அன்பிற்காக காத்திருக்க வேண்டும். இல்லையெனில் இந்த திருமணத்தை நடத்தி வைத்தவர்களை வைத்து பஞ்சாயத்து செய்யலாம். இருவரின் மனநிலையும் வெகு தூரத்தில் இருந்து, தாம்பத்தியத்தில் இணைய முடியவில்லை, இந்த நிலையில் தினமும் இருவருக்குள் மன அழுத்தத்தை வளர்த்து கொள்வதை காட்டிலும் விவாகரத்து செய்துவிடலாம்.

happy happy-life-style

தாம்பத்திய சுகம் சில நொடிகள் தான். ஆனால் அங்கு பரிமாறப்படும் அன்பு வாழ்வு முழுக்க இருவரிடமும் பேரானந்தத்தை தரக்கூடியது. இருவருக்குள்ளும் நல்ல புரிதல், காதல், அன்பை பகிர்தல் இருந்தால் தாம்பத்தியம் ஒரு பொருட்டு இல்லை. இந்த நிலையை கடந்தவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் மனநிலைக்கு வந்திருப்பார்கள். ஆனால் நம் பெண்கள் பெரும்பாலும் வெளியே எதையும் சொல்லாமல் பல்லை கடித்து கொண்டு வரும் பழிகளையும் ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள்.