HotPicks

நாலு வார்த்தை இங்கிலீஸ் பேச தெரியாமல் திணறியவன் நாடு நாடா சுற்றுகிறான்! ஒரே மாதத்தில் இங்கிலீஷ் பேச வைக்கும் குறுக்கு வழி என்ன? கோச்சிங் கிளாஸ் சுத்த தண்டம்!

Mar 17 2021 11:57:00 AM

ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிதான வழி என்ன? தனியாக டியூஷன் போவது, ஆங்கிலம் பேச உதவியாக உள்ள செயலிகளை இன்ஸ்டால் செய்து அதிலிருந்து கற்றுக்கொள்வது, தினமும் ஆங்கில அகராதியை பயன்படுத்துவது என ஆங்கிலம் பேச ஆர்வம் உள்ளவர்கள் நிறைய செய்முறைகளை பின்பற்றி கொண்டிருப்பார்கள். ஆனால் எளிதாக மிக விரைவில் ஆங்கிலம் பேச விரும்புபவர்கள் சில குறுக்கு வழிகளை பின்பற்றினால் அதாவது ஸ்மார்ட் ஒர்க்க்கை கையாண்டால் கண்டிப்பாக ஒரே மாதத்தில் உங்களிடம் நல்ல மாற்றம் தென்படும்.

communication-skills english-skills

நண்பரின் மகன் பெரிய ஐடி கம்பெனியில் பணிபுரிய தேர்வாகியுள்ளார். பையன் டெக்னீக்லாக எந்த வேலை கொடுத்தாலும் பிச்சு உதறுவான். ஆனால் ஆங்கிலத்தாலே அலுவலகத்தில் இவன் புறக்கணிக்கப்படுகின்றான். வெளிநாடு செல்லும் வாய்ப்பெல்லாம் இதனாலே தவறி தவறி போவதால், ஆங்கிலம் கற்றுக்கொள்ள தனியே பெரிய தொகை கொடுத்து டியூஷன் எல்லாம் போனான். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. 

communication-skills english-skills

பின்னர் அவனுக்கு காதல் நாவல்கள் ரொம்ப பிடிக்கும், அதனை ஆங்கிலத்தில் வாங்கி படிக்க ஆரம்பித்தான். உ ணர்வுகளோடு சொல்லும் ஆங்கில வார்த்தைகளை மெல்ல மெல்ல புரிந்துகொண்டு அதனை தன்னுடைய அன்றாட வாழ்விலும் பயன்படுத்த ஆரம்பித்தான். அடுத்து, ஆங்கில படங்களை சப்டைட்டிலோடு படித்து புரிந்து கொள்ள முயன்றான். வசனம் புரியவில்லை என்றால், அதே காட்சியை ஐந்தாறுமுறை போட்டு பார்ப்பான். ஒரே மாதத்தில் நல்ல முன்னேற்றம், ஆறே மாதத்தில் வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. அலுவலகத்தில் எந்த ப்ரெசென்ட்டேஷன் ஆக இருந்தாலும், இவன் தான் முன்நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார். பயங்கர வளர்ச்சி. 

communication-skills english-skills

ஆங்கில அறிவு இல்லாமல் இருந்தது தான் அவனுடைய முழு வளர்ச்சிக்கும் தடையாக இருந்துள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதை சரியாக புரிந்துகொண்டு அதற்கான முயற்சி எடுத்ததால் வெற்றி அவரது வசமாகிவிட்டது. பலருக்கு 'தனக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாமல் உள்ளதால் தான், வெற்றி எட்டாக்கனியாக உள்ளது' என்பதை நண்பரின் மகன் விஷயத்தில் புரிந்துகொண்டோம்.