HotPicks

மூலபத்திரம் இல்லாத சொத்தை வாங்கலாமா? எதற்காக வில்லங்க சான்றிதழை வாங்க சொல்கிறார்கள்? எல்லாமே நம்ம நலத்துக்கு தான்!

May 14 2021 08:48:00 AM

புதிதாக நிலம் அல்லது வீடு வாங்க போகும்போது, கட்டாயம் சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அவற்றுள் நிலம் வாங்கும் ஏரியாவில் உள்ள இடத்தின் உண்மையான மதிப்பு, நிலத்தின் தற்போதைய உரிமையாளர், அரசின் பதிவுடன் இன்றைய உரிமையாளர் எல்லா சான்றிதழ்களையும் சரியாக வைத்துள்ளாரா? என்பதை கேட்டு விசாரித்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் சொத்து கைமாறிய பிறகு, வாரிசுதாரர்கள் மூலம் பி ரச்சனை எழும். இப்படி எழும் பிரச்சனைகளுள் ஒன்றுதான் மூலபத்திரம் இல்லாமல் இருப்பது. மூலபத்திரம் இல்லாத சொத்தை வாங்கவோ விற்கவோ கூடாது. நமது நாட்டில் இது சாத்தியமும் இல்லை. ஆனால் மூலபத்திரத்தின் நகல் மூலம் சொத்தை வாங்கலாம். 

moola-pathiram patta-chitta

முதலில் மூலபத்திரத்தின் நகலை பெற வேண்டிய வேலையில் இறங்க வேண்டும். இதற்கு சொத்தின் உரிமையாளர் பத்திரம் காணாமல் போய்விட்டது என முதலில் போ லீசாரிடம் பு கார் செய்ய வேண்டும். பு காரின் நகலை மிகவும் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இதனையடுத்து, ஏதாவது பத்திரிகையில் சொத்து காணாமல் போனது குறித்து விளம்பரம் ஒன்றை போட வேண்டும். 

moola-pathiram patta-chitta

இந்த முதல்நிலை வேலைகளுக்கு பிறகு, துணை பதிவாளர் அலுவலகத்தில், படிமம் 22 ஐ கேட்டு நிரப்பி, அதோடு அடையாள அட்டை நகல், காவல்துறை பு காரின் நகல், சொத்து தொடர்பான இதர நகல் வைத்திருந்தால் எல்லாவற்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். பத்திரத்தில் மூலபத்திரத்தின் எண் மற்றும் பதிவு அலுவலக விவரம் கண்டிப்பாக இருக்கும். அந்த விவரத்தை கொண்டு பதிவுத்துறையில் எளிதாக பத்திரத்தின் நகலை வாங்க முடியும். 

moola-pathiram patta-chitta

எல்லா சான்றிதழும் சரியாக இருக்கிறது என்றால், சொத்தை வாங்குவோர் தாய் பத்திரத்தின் காலத்தில் இருந்து இப்போதுவரை வில்லங்க சான்றிதழை பெறவும். பின்னர் அவற்றை பொறுமையாக வாசிக்கவும். பத்திரத்தின் மீது கடன் உள்ளதா? அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? நிலுவை எல்லாம் நீக்கப்பட்டு விட்டதா? என எல்லாவற்றையும் மெதுவாக படித்துப்பார்த்து வாங்கவும்.