HotPicks

#Smart tv வாங்கினால் மட்டும் போதாது - மனதில் நிறுத்த வேண்டிய 5 விதிமுறைகள்!

Feb 10 2020

அட்டைப்பெட்டி மாதிரி இருந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு, இன்னைக்கு செல்போன் தடிமனில் டீவி வர ஆரம்பிச்சாச்சு. ஸ்மார்ட் டீவி தான் வாங்கணும் என்று பாக்கா பிளான் போட்டு வாங்கினாலும், எந்த மாதிரியான வீட்டுக்கு எப்படி வாங்க வேண்டும் என்ற வழிமுறை பலருக்கும் தெரிவதில்லை. கை நிறைய காசு இருக்குதே என்று பத்துக்கு பத்து அறையில் 65 இஞ்ச் டீவி வாங்கி மாட்டினால், காசும் தண்டம், கண்ணும் போயிரும். சரி ஒரு வீட்டுக்கு டீவி வாங்க வேண்டும் என்றால், அறையின் அளவு எப்படி இருக்க வேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

#1. 24 இஞ்ச் டீவி - பார்ப்பவருக்கும் டீவிக்கும் இடையே குறைந்த பட்சம் 3 முதல் 5 அடி தூரம் வரை இருக்க வேண்டும்.

#2. 32 இஞ்ச் டீவி - பார்ப்பவருக்கும் டீவிக்கும் இடையே குறைந்த பட்சம் 4 முதல் 5 அடி தூரம் வரை இருக்க வேண்டும்.

#3. 43 இஞ்ச் டீவி - பார்ப்பவருக்கும் டீவிக்கும் இடையே குறைந்த பட்சம் 6 முதல் 9 அடி தூரம் வரை இருக்க வேண்டும்.

#4. 55 இஞ்ச் டீவி - பார்ப்பவருக்கும் டீவிக்கும் இடையே குறைந்த பட்சம் 8 முதல் 12 அடி தூரம் வரை இருக்க வேண்டும்.

#5. 65 இஞ்ச் டீவி - பார்ப்பவருக்கும் டீவிக்கும் இடையே குறைந்த பட்சம் 10 முதல் 12 அடி தூரம் வரை இருக்க வேண்டும்.

#Smart TV வாங்குவதில் இத்தனை சூட்சமம் மறைந்திருக்கிறது. இது தெரியாமல் வாங்கி சரியாக பார்க்க முடியாமல் விழிப்பதை விட, எப்படிப்பட்ட அறைக்கு எந்த அளவில் வாங்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு வாங்கினால் பணமும் மிச்சம், அலைச்சலும் மிச்சம்.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top