HotPicks

#chef: நீங்க சமையலில் எக்ஸ்பர்ட்டா என்பதை கண்டுபிடிக்கும் சோதனை?

Feb 14 2020

கல்யாணம் ஆன புதுசுல 'ரொம்ப பசிக்குது! சாப்பாடு ரெடியானு?' என் மனைவிகிட்ட கேட்டதற்கு, 'இருங்க சட்னி சூடு ஆவதற்குள்ள, என்ன தான் அவசரமோனு' சொன்னதும் என்னோட பசி இருந்த இடம் தெரியாம தெறிச்சு ஓடிடுச்சு. அந்த சம்விபவத்திற்கு பின்னாடி நானே சமைக்க கத்துட்டேன். இப்போ எங்க வீட்ல நான்தான் சமையல் எக்ஸ்பர்ட். ஏதாவது வித்தியாசமான  டிஷ் செய்யலாமானு கூகுளில் தேடி கொண்டிருக்கும் போது சமையல் கலையில் ஐந்து கட்டளைகளை படித்தேன். இதனை சரியாக பின்பற்றினாலே நாம் சமையல் நிபுணர்களாம்.

#1. நீங்க சமையலில் எக்ஸ்பர்ட்டா  என்பதை சமைத்த இடத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். சமையலுக்கு முதல் முக்கிய காரணியே சுத்தம். அந்த இடம் அசுத்தமாக இருக்கும் போது கரப்பான், பல்லி என அனைத்து உயிரினத்திற்கும் நீங்க ஆதரவு கொடுத்தது போல ஆகிவிடும்.

#2. அடுத்து கத்தி, புத்தி இரண்டையும் தீட்ட வேண்டிய இடம் சமையலறை. ஆக, நீங்க பயன்படுத்தும் பாத்திர பண்டமெல்லாம் தரமானதாக பயன்படுத்துகிறீர்களா என்பதும் நீங்க வல்லுனரா என்பதை நிர்மானிக்கும் காரணியாம்.

#3. நல்ல சமையல்காரர் என்றால் உணவை வாயில் போடாமலே டேஸ்ட், உணவு வெந்து இருக்கிறதா? இல்லையா? என்பதையெல்லாம் மோப்பம் பிடித்தே கண்டுபிடித்துவிடுவார்களாம். 

#4. அடுத்து முக்கியமானது, நல்ல சமையல்காரர் என்றால் சமைக்கும் நேரத்தை சரியாக யூகிக்க வேண்டுமாம். அதுமட்டுமா! எந்த காய் எவ்வளவு நேரத்தில் வேகும், எப்போது உப்பு சேர்க்க வேண்டும், காரம் அதிகமானால் என்ன செய்ய வேண்டும், கடல் மீனை எப்படி சமைக்கணும், ஆற்று மீனை எப்படி சமைக்கணும் இது போன்ற சின்ன சின்ன குறிப்புகள் நிபுணர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். இங்கு தான் அவர்கள் கைப்பக்குவம் என்று பெயர் எடுத்துவிடுகிறார்ககள்.

#5. சமையல் கலை எக்ஸ்பர்ட்டுகள் அரைத்த மாவையே அரைக்க மாட்டார்கள். அவர்களுக்குள் இருக்கும் ஆர்வமே அவர்களை புது புது பதார்த்தங்களை முயலவைக்குமாம் 

#chef, இந்த ஐந்தும் உங்களுக்கு பொருந்தினால், சமையலில் உங்களை விஞ்ச யாரும் இல்லை. கை தேர்ந்தவர் என்றே சொல்லலாம் என கூறுகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்     

Top