HotPicks

கேஸ் சிலிண்டர் தீரப் போகிறது என்பதை எப்படி முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்? காலியாவதற்கு சில மணிநேரம் முன் காட்டப்படும் அறிகுறி! வெடிச்சிருமோன்னு பயம் வேண்டாம்!

Jun 10 2021 12:19:00 PM

அரிசி வடித்து, குக்கரில் போட்டு வைத்துவிட்டு, கடைக்கு பொருள் வாங்க போயிட்டேன். கடைக்கெல்லாம் சென்று வந்த பிறகும், ரொம்ப நேரமா விசில் சத்தமே வரல. என்னடான்னு கிச்சன் உள்ளே எட்டிப்பார்த்தால், கேஸ் அடுப்பு அணைந்து கிடந்தது. கொஞ்சம் கேஸ் ஸ்மெல் வந்தது. ஜன்னல் எல்லாம் நல்லா திறந்துவிட்டு, மீண்டும் அடுப்பு பற்ற வைத்தேன். அடுப்பு எரியல. பிறகு சிலிண்டரை தூக்கிப்பார்த்து கேஸ் சுத்தமாக காலியாகிவிட்டது என்பதை அறிந்துகொண்டேன். 

gas gas-cylinder empty-cylinder

அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்ந்துவிட்டதால், காலேஜ் முடிக்கும் வரையில் சமையல்கட்டு பக்கம் போனதே இல்லை. திடீருன்னு கல்யாணம், புதுசா சமையல் வேலை எல்லாம் செய்ய வேண்டி இருப்பதால், அடிப்படை அறிவு கூட இல்லாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன். இப்போ தான் அம்மா கொஞ்சம் கொஞ்சமா சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்துட்டு இருக்காங்க. கேஸ் சிலிண்டர் காலியாகப்போவதை எப்படி முன்கூட்டியே அறிந்து கொள்வது முதற்கொண்டு, இப்போது கேட்டு தெரிந்து கொண்டேன்.

gas gas-cylinder empty-cylinder

பொதுவாக கேஸ் அடுப்பு நீல நிற ஒளியோடு எரியும். எப்போதாவது இடையிடையில் லேசான இளஞ்சிவப்பு வண்ணம் அவ்வப்பொழுது வரும். இதுவே கேஸ் தீரப்போகும் நிலையில் இருந்தால், மிகையான இளஞ்சிவப்பு வண்ணத்துடன் தீ வரும். அப்படி வந்தால், எரிவாயு 1-2 நாட்களுக்குள் தீரப்போகிறது என்று கொள்ளலாம். சில நேரங்களில் எரிவாயு குறையக் குறைய, தீயானது, திணறித் திணறி எரிய ஆரம்பிக்கும். தீயின் வேகத்தை அதிகரித்தாலும், தீ வேகம் குறைவாகவே இருக்கும்.

gas gas-cylinder empty-cylinder

இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால், கேஸ் காலியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எந்த பாத்திரம் வைத்தாலும், அடியில் கரி பிடிக்கும். அதன் பின் 2 நாட்களுக்குள் சிலிண்டர் காலியாகிவிடும். இது தவிர, கேஸ் தீரும்போது மெர்கெப்டன்ஸ் வாசனை அதிகமாக வரும். அது கேஸ் லீக் போன்று தோன்றும். அந்த வாசனை வந்து ஓரிரு நாளில் கேஸ் தீர்ந்து விடும். பொதுவாக சமையல் எரிவாயுவுக்கு எந்த மணமும் கிடையாது. அது லீக் ஆவதை அறிந்து கொள்ள மெர்கெப்டன்ஸ் இரசாயனம் சேர்க்கப்படுகிறது. அதன் அடர்த்தி சிலிண்டர் அடியில் அதிகமாக இருக்கும். அதனால் தான் தீரும் சூழலில் அதிக கேஸ் வாசம் வருகிறது. இப்போதைக்கு இந்த அளவுக்கு தெரிந்துகொண்டேன். உங்களுக்கு தெரிந்த நுணுக்கம் இருந்தாலும் பகிரலாம்.