Hugs & Kisses

#happiness: பிறவியிலே கண் தெரியாத ஒருவரின் காம இச்சை எப்படி இருக்கும்?

Aug 01 2020

பொதுவாக கண்களை சார்ந்து தான் காதல், மோகம் அமைகிறது. இந்த விஷயத்தில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மோகத்தை தூண்டி விடுவதில் ஐம்புலன்களும் முக்கிய பங்காற்றுகிறது. அன்பானவரின் ஸ்பரிசம் அதாவது தொடு உணர்வு, வாழ்க்கை துணையின் தனிப்பட்ட நறுமணம், அவர்களது குரல், அன்பிற்குரியவரின் மென்மையான முத்தம் என இவை தரும் இன்பம் போதாதா? இந்த மயக்கத்தில் கண்களே சொருகியிருக்கும். இதனை உணர இயற்கை கொடுத்த உணர்வுகளே போதுமானது. கண் எதற்கு? அப்படி பார்த்தால் இயற்கையாகவே கண் தெரியாத சில விலங்கினங்கள் உண்டு. உதாரணத்திற்கு ஒல் சிலந்தி இனம். 

love romance happy wedding

காட்சி பொருளை விடமும் கற்பனை தான் அழகும் ஆழமும் நிறைந்தவை. அந்த வகையில் பிறவியிலே கண் பார்வை அற்றவர்கள் சின்ன சின்ன விஷயங்களையும் நுட்பமாக ரசிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கற்பனையில் அவர்களது காதல் முற்றிலும் வேறுபட்டிருக்கும். நாம் பெண் பார்க்க செல்லும்போது, பெண்ணை குறித்தோ மாப்பிள்ளை குறித்தோ இருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும். நேரில் பார்க்கும் போது கற்பனை போலவே இருந்திருக்க கூடாதா? என ஒரு நிமிடம் எண்ணுவோம். ஆனால் அவர்களுக்கு அந்த கற்பனை தான் வாழ்க்கையே.

love romance happy wedding
 
'பிறப்பு தடைபட கூடாதென இயற்கை வைத்த உந்துதலா மோகம்? அல்லது மனம் கற்பனை செய்தே வளர்த்து கொண்ட செயற்கை உணர்வா?' என்றால் கற்பனை இல்லாமல் காதல் இல்லை. காதல் வந்தால் பின்னாடியே மோகமும் வருவது வழக்கம் தானே! ஆக காதலிக்க, மோகத்தை உணர கற்பனையே போதும் என்கிறார்கள் கவிஞர்கள். பார்வையற்றவர்களுக்குள் மலரும் காதலை குக்கூ படம் அழகாக காட்டியிருக்கும். குறிப்பாக அவர்கள் எப்படியெல்லாம் அவர்களது காதலை கொண்டாடுகிறார்கள் என்பதை!

love romance happy wedding

என்னதான் காமம் என்பது உடலுடன் தொடர்புடையது என்றாலும், மோகம் என்பது முழுக்க முழுக்க உணர்வுடன் மட்டுமே தொடர்புடையது. ஆக சந்தோசம், கோவம், வெறுப்பு, அழுகை என இவற்றை போல் காமமும் ஒருவித உணர்வே!  காம இச்சையை உணர உணர்வுகள் மட்டுமே போதுமானது. மனித உணர்வுகள் ஐம்புலன்களில் ஒன்றையொன்று சார்ந்துள்ளதே தவிர ஒன்றையே சார்ந்தது அல்ல!