HotPicks

#WoW: இப்போ 144 தடை உத்தரவு! பசிக்குமுல என்ன பண்றது?

Mar 24 2020

இப்போ 144 தடை உத்தரவு போட்டுட்டாங்க. நோய்க்கிருமி தொற்றை கட்டுப்படுத்த தான் இந்த முயற்சியே தவிர, நம்மை பீதியில் ஆழ்த்த கிடையாது. இந்த நேரத்தில் மக்களுக்கு ஏற்படும் நேரடியான பாதிப்புகளில் முக்கியமானது பசியும், உணவு பற்றாக்குறையும். நீங்க வழக்கமா செல்லும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும். பசி உங்களை பாடாய்படுத்தும். அதனால் நீங்கள் உங்கள் விருப்ப உணவை எடுக்க முடியாமல் போகலாம். இந்த நேரத்தில் உணவு விசயத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து அடுத்து பார்க்கலாம்.

your image

#1. ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் தண்ணீர் பருகவும்.

#2. தண்ணீரில் லெமன் பிழிந்து, HIMALAYAN ROCK SALT எனப்படும் இந்துப்பு போட்டு பருகவும்.

#3. நல்ல கொழுப்பு மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். காலை 4 இட்லி உண்ணும் நபர் அதற்கு பதிலாக 4 முட்டை உண்ணலாம். 5 மணி நேரங்களுக்கு பசி இருக்காது. முட்டையை சமைக்கும் பொழுது நெய் அல்லது வெண்ணெய் இட்டு சமைத்தால் மேலும் சிறப்பு.

#4. பட்டர் டீ அல்லது பட்டர் காபி பருகலாம்.

#5. பசிக்கும் பொழுது சிறு தேங்காய் துண்டுகளை உட்கொள்ளலாம். வறுத்த பாதாம் உண்ணலாம்.

#6. நார்ச்சத்து கொண்ட காய்கறிகள், கீரைகள் உண்ணவும். மாவுச்சத்து உடைய உணவுப்பொருட்கள் இன்சுலினை சுரக்கச் செய்து பசியை தூண்டிக்கொண்டே இருக்கும். கொழுப்புச்சத்து கொண்ட உணவுகள் பசியை கட்டுப்படுத்தி தேவையான ஆற்றலையும் வழங்கும்.

#WoW: எந்த சூழ்நிலை வந்தாலும் எதிர்கொள்ள தயாரா இருக்கோம். இதென்னா ஜுஜுபி மேட்டர். பதற்றம் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் பொழுதை கழியுங்கள், வந்த நோயெல்லாம் தெறித்து ஓடும்.

 

Top