His & Her

இது நல்ல Perfume-மா.? ஆளை மயக்கும் அற்புதம் நிகழ்த்த 6 வழிமுறைகள்!

Feb 08 2020

நாம் எப்படி கல்யாணத்திற்கு நகை சேர்க்கிறோமோ, அதே போல் யூத பெண்கள் தங்கள் திருமண செலவிற்காக வாசனை திரவியங்களை சேர்ப்பார்கள். அவர்களின் மிகப்பெரிய சொத்து என்றால், அது இந்த வாசனை திரவியம் தான். ஒரு பெண்ணிடம் இருக்கும் வாசனை திரவியத்தை வைத்தே, அவளின் மதிப்பு அளவிடப்படும். அதாவது நம்ம ஊரில் நூறு பவுனுக்கு அமெரிக்கா மாப்பிள்ளை என்பது போல. ஒரு காலத்தில், வாசனை திரவியங்கள் ஓர் இனத்தின் சொத்தாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில் பார்த்து பார்த்து Perfume வாங்க தெரிஞ்ச நமக்கு, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று, கொஞ்சம் தெரியாம இருக்கலாம். அதைப்பற்றி அடுத்து பார்க்கலாம்.

your image

#1. முதலில் எந்த ஒரு வாசனை திரவியமாக இருந்தாலும், அதை உடம்பில் ஈரப்பதம் இருக்கும் இடங்களிலோ அல்லது வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலோ அடிக்கவும். அதாவது கழுத்தின் பின்புறம், காதின் ஓரமாக, அக்குள் பகுதி ஆகிய இடங்களில் அடிக்கவும்.

#2. உடம்புக்கு கொஞ்ச தூரம் தள்ளி வைத்து அடித்துவிட்டு, துடைப்பதை தவிர்த்து விடனும்.

#3. பயணம் செய்யும் நாட்களில், வாசனை திரவியத்தை ஆடைகளின் மீது அடித்து பேக் செய்யலாம். வாசம் அவ்வளவு சீக்கிரத்தில் போகாது.

#4. வாசனை திரவிய பாட்டிலை சரியான இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். குளிர் அல்லது வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வைத்தால், அதற்கான நறுமணத்தை இழக்கும் வாய்ப்புகள் உள்ளது.

#5. முக்கியமான கடைக்கு வாசனை திரவியம் வாங்க போனால், இருப்பதை எல்லாம் எடுத்து அடித்து பார்த்து டெஸ்ட் செய்துவிட்டு, அடுத்ததை தேர்வு செய்வது வேஸ்ட். எது எந்த மணம் கொடுத்தது என்று குழம்பி விடுவோம்.

#6. கடைக்கு உள்ளே வைத்து டெஸ்ட் பண்ணும் போது, ரூம் ஸ்பிரே, ஏசி போன்ற காரணத்தால் அதன் நறுமணம் மாறுபடக்கூடும். ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்து பார்ப்பது நல்லது.

இதெல்லாம் போட்டு உடலில் வாசனை வந்தால் மட்டும் போதாது. நம்ம வாழ்க்கையும், இதே போல் வாசம் வீசனும்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top