HotPicks

ஏரி கையில் கிடைச்சாலும் ஏரியாவா பிரிச்சு விக்கிறாங்க! ஏமாறாமல் இடம் வாங்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிளா சொல்றேன் வாங்க!

Sep 11 2020 07:04:00 PM

சென்னை பெருவெள்ளம் வந்த நேரத்தில், "நல்ல ஏரியாவா காட்டச்சொன்னா, இப்படி ஏரி இருந்த இடமாவா காட்டுவீங்க" என்கிற மாதிரியான மீம்கள் வைரலானது. அன்னைக்கு மட்டும் இல்ல, இன்னைக்கும் அப்படித்தாங்க. கொஞ்சம் ஏமாந்தால், வறண்டு கிடக்கும் குளத்தைக் கூட பிளாட் போட்டு, தலையில் கட்டி விடுவாங்க, இந்த ரியல் எஸ்டேட் முதலைகள். ஒரு சில இடங்களில், கிணறு இருந்த இடத்தில், மண்ணை கொட்டி மூடிவிட்டு, அதனையும் சாதாரண நிலம் போல விற்கும் ஏமாற்று வேலை எல்லாம் பார்த்திருக்கிறேன். 

real-estate land land-value

பூமி வாங்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு என்பதை தெரிந்து கொண்டே, முடிந்த வரைக்கும் சுருட்டிவிடுகின்றனர் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். இன்னைக்கு போட்ட பணத்தை விட, பல மடங்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் பிஸினஸ் என்றால், அது ரியல் எஸ்டேட் துறைதான். இப்படி பெரிய பெரிய முதலைகள் புளங்கும் இடத்தில், நாமும் கொஞ்சம் சூதானமாக இருந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் பிழைப்பு ஓட்ட முடியும். ஒரு இடத்தை வாங்கப்போகிறோம் என்றால், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

real-estate land land-value

முதலில் பட்டா விற்பவரின் பெயரில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு 30 வருடத்திற்காவது, அந்த இடத்தின் உரிமையாளர்கள் விவரம் குறித்த வில்லங்கத்தை பார்வையிட வேண்டும். தாய் பத்திரம் இருக்க வேண்டும். அதனோடு வரைபடம் இருந்தால் ரொம்ப நல்லது. CMDA அப்ரூவல் அல்லது DTCP அப்ரூவல் இருக்கா என்பதை பார்க்க வேண்டும். அது இல்லாமலும் வாங்கலாம். அப்படி வாங்கிய பிறகு, நாமாக அப்ரூவல் வாங்க வேண்டும் என்றால், ரொம்ப அலைய வேண்டி இருக்கும்.

real-estate land land-value

இடத்திற்கு அருகில் குறைந்த பட்சம் 20 அடி அகல ரோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அப்ரூவல் எளிதில் கிடைக்கும். இடத்திற்கு அருகில் மின்கம்பம் இருக்க வேண்டும். இல்லையெனில், கம்பத்தை நம்முடைய இடத்திற்கு அருகில் கொண்டுவர நம்முடைய கை காசு கொஞ்சம் போட வேண்டி வரும். அடுத்து தண்ணீர் வசதி எப்படி இருக்கு என்பதை சோதனை செய்துபார்க்க வேண்டும். உப்பு தண்ணியா இருந்துவிட்டால், ரொம்பவும் கஷ்டம்.

real-estate land land-value

அரசுக்கு சொந்தமான இடம் ஏதாவது அருகில் இருக்கா என்பதை பார்த்து, அப்படி இருந்தால், தடையில்லா சான்றிதழ் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். லாஸ்ட் அண்டு பைனல் டச், குளம் அல்லது ஏரி இருந்த இடமா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி மட்டும் இருந்துவிட்டால் எந்தவித அப்ரூவலும் கிடைக்காது. மழை காலத்தில் சென்னையில் அனுபவித்த நிலையை எதிர்கொள்ள வேண்டிவரும். நிலத்தின் மார்கெட் மதிப்பு, அரசின் மதிப்பு இரண்டும் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாக இருந்தால் விலைபேசி முடிக்கலாம்.