Hugs & Kisses

புள்ள தலையில் முக்காடு! லாட்ஜ் முதல் பஸ் ஸ்டேண்ட் வரை 4 முறை பறந்த பைக்! வேலியை விட்டு வெளியே வரும் பெண்களை குதறி எடுக்க காத்திருக்கும் கூட்டம்!

May 15 2021 04:07:00 PM

லாக் டவுன் அறிவிப்பு வருவதற்கு முந்தின நாள் நைட். மீன் ரோஸ்ட் சாப்பிட பஸ் ஸ்டேண்ட் அருகில் நின்று கொண்டிருந்தோம். 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரொம்ப நேரமா, வாடகை டாக்ஸி நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் இருக்கும். சிறிது நேரம் கழித்து பைக்கில் வந்த ஒருவன், அங்கிருந்து லாட்ஜ் வரை அந்தப்பெண்ணை கூட்டிக்கொண்டு போனான். அவள் இருட்டில் இருந்து வெளியே வந்த உடனே, முக்காடு போட்டுக்கொண்டாள். 

lover bike lodge

லாட்ஜ் அருகில் சென்றவுடன் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மீண்டும் பஸ் ஸ்டேண்ட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டான். சிறிது நேரம் பேசிக்கொண்ட பிறகு, மீண்டும் பைக் எடுத்திட்டு இருவரும் கிளம்பினர். இப்படியே வருவதும் போவதுமாக இருந்தது. கடைசியா ஒரு கழிசடையான லாட்ஜ் அருகில் பைக் சென்றது. அங்கே சகலதுக்கும் அனுமதி கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு பிறகு, அந்த ஜோடிகளை பார்க்க முடியவில்லை. நாங்களும் வீட்டுக்கு திரும்பிவிட்டோம்.

lover bike lodge

இதை ஏன் நான் சொல்றேன்னா, இன்னைக்கு ஒரு பெண் ஏமாற்றப்படுகிறாள் என்றால், ஆண்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் உள்ளே நுழைய முடியும். பெண்களும் ஆண்களுக்கு சரி சமமாக சில தவறான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆண் எளிதாக தப்பி விடுகிறான். ஆனால் ஒரு பெண் ஏமாந்துவிட்டால், அது மானஇழுக்காக மாறிவிடுகிறது. சந்தேகம் இருந்தால், கல்லூரி படிக்கும் ஒரு பெண்ணின் செல்போனை வாங்கி பாருங்க. ஊரில் இல்லாத அசிங்கம் எல்லாம் அதில் இருக்கும்.

lover bike lodge

யாரும் அவங்க அவங்க அந்தரங்க விஷயங்களில் தலையிட விரும்புவதில்லை என்பதால், பல பேரின் வண்டவாளம் வெளியே தெரியாமல் இருக்கு. பெண்கள் மீதான குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களில் பெரும்பாலானோர், நல்ல படித்த குடும்பகளிலிருந்து வந்தவர்களாகவும், தாய் - சகோதரிகள் போன்ற உறவுகள் உடையவர்களாகவுமே இருக்கின்றனர். அப்படி இருந்தும் தவறு செய்ய துணிகிறார்கள் என்றால், பெண்கள் மீது நல்ல அபிப்ராயம் காட்டாமல் வளர்க்கப்படுகிறார்கள் என்று அர்த்தம். ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றி கண்டுவிட்டாலே, பல குற்றங்கள் ஒழிந்துவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை.