Hugs & Kisses

#dreamwedding: கல்யாணத்தில் லட்ச கணக்கில் வீண் செலவுகளை கண்டறியும் யுக்தி!

Feb 14 2020

இருப்பத்து அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, என்னோட கல்யாணத்துக்கு ஆன  மொத்த செலவே ஐம்பதாயிரமாத்தான்.  இன்னும் கொஞ்சம் தடபுடலா செஞ்சா ஒரு லட்சம் வரும் அம்புட்டுத்தா. ஆனால் இந்த காலத்துல கல்யாணம்னு சொன்னாலே ஆயிர கணக்கு செலவாகுது. ஆமாங்க..! கல்யாணம் ஆகுதோ இல்லையோ கல்யாண புரோக்கர் ஒரு வரன காட்டி ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஆயிரம் ரூபா வாங்கிடுறாப்டி. என் புள்ளைக்கு ஒரு வழியா கல்யாணமும் கூடிக்குச்சு. ஆனால்  வீண் செலவு என்னன்னு கண்டுபுடுச்சாலும் அதை தவிர்க்க முடிவதில்லை.

#1. என்ற புள்ள அவளோட ஃப்ரண்ட்ஸ்களுக்கு அழைக்க, நல்லா பளபளனு இருக்கிற வெட்டிங் கார்டு ஆர்டர் பண்ணா.  நீங்க நம்ப மாடீங்க அந்த பத்திரிகை மட்டும் முப்பதாயிரம் வந்திருச்சு. மூவாயிரத்துக்கே எங்க வீட்டுக்காரர் மூக்குறுஞ்சுவாரு. இப்போ கல்யாணத்துல காசு தண்ணீ மாறி செலவ பார்த்த மனுஷனுக்கு கண்ல ரத்த கண்ணீரே வந்திருச்சு போங்க.

#2. எங்க ஐயா என்னோட கல்யாணத்துக்கு சீர் வரிசையா பண்ட பாத்திரம் கொடுத்தாப்படி அவ்ளோதான் . இப்போ என் புள்ளைக்கு கார், ப்ரிட்ஜ்,வாஷிங் மிசின் அப்பப்பா..!

#3. பீச் வெட்டிங், ட்ரீம் வெட்டிங் அடேங்கப்பா எத்தனை வகை? கோவிலுக்கு போய் சாமி முன்னாடி வேண்டி தாலி கட்டிக்கறது எவ்ளோ புண்ணியம்னு இந்த காலத்து பசங்களுக்கு எங்க புரியுது. இதுல மேரேஜ் அவுட்டோர் ஷூட்டிங் வேற ஒரு செலவு. இன்ஸ்ட்டால போட்டோ போடறதுக்கே கல்யாணம் செய்துக்குவாங்க போல.

#4. கல்யாண மேடை டெக்கரேஷனுக்கு பேசலாம்னு போன் போட்டோம். எங்க வீட்டுக்காரர் சிலை மாதிரி உறைஞ்சு போய்ட்டார். ஆரம்பமே லட்ச ரூபாயாமே! 

#5. இதெல்லாம் இல்லாம புள்ளைக்கு மேக்கப், மெகந்தி என நாற்பதாயிரத்தை தாண்டிடுச்சு. பக்கத்து வீட்டு மருதாணிய அரைச்சு என் கல்யாணத்துக்கு மெகந்தி போட்டது தான் நினைவுக்கு வந்தது. இப்போது மெகந்திக்கே இரண்டாயிரம் ரூபா..!

#6. போட்டோக்கு வேற இரண்டு லட்சமாம்! அப்படி இப்படினு இந்த செலவெல்லாமே ஒரு பத்து லட்சம் வந்துரு போல.

#7. கண்ணுக்கு அழகா காஞ்சிபுரத்து பட்டு புடவைய கட்டிட்டு நில்லு கண்ணுனு சொன்னா..! இந்த புள்ள ஏதோ லேகங்காவாமே அதை தான் போடுவேன்னு அடம். கல்யாண பொண்ணு போடற அந்த துணியே முப்பதாயிரங்க!  அதை அடிக்கடி வீட்டு விசேஷத்துக்கு போட முடியாது கண்ணுனு சொன்னா, கல்யாணம் வாழ்க்கையில ஒருமுறைதான்னு வியக்கானம் பேசுது. 

#dreamwedding, இந்த செலவெல்லாம் கணக்கு போட்டாலே ஒரு வீடு வாங்குகிற தொகை வருது. யாரு இப்படி புதுசு புதுசா சடங்கு சம்பிரதாயத்தை கொண்டு வந்தது. வசதியா இருக்குற நாம செய்யற செலவால ஏதோ குடும்பம் நல்லா இருக்கும்னு சந்தோஷ படறதா இல்ல மிடில் க்ளாஸ் வர்க்கமே பெரிய சரிவை சந்திக்கும்னு விசன படறதா?   
 
    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top