Hugs & Kisses

ஐ.டி கலாச்சாரத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோசமான விஷயங்கள்!

Feb 12 2020

your image

கணேஷ்.. நீங்க  32 வருஷமா ஐ.டி துறையில இருக்கீங்களே. நீங்க பார்த்த வரைக்கும் என்ன மாதிரியான மோசமான செயல்கள் எல்லாம் அந்த துறைக்குள் நடக்குது.? கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா.?

நிச்சயமா ஆனந்த். உங்களுக்கு சொல்லாம இருப்பனா என்ன!

சரி சொல்லுங்க புரோ. நானும் தெரிஞ்சுக்கிறேன்.

இங்க பாருங்க ஆனந்த். உடன் வேலை செய்வோரின் அன்பும் ஈடுபாடும் நீங்கள் வேலையை விட்டு நின்று விட்டால் அல்லது நோய்வாய்ப்பட்டால் காணாமல் போய் விடும். இந்த சுயநல குணத்தை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வோரிடம் காணமுடியாது என்பது என் கருத்து.

ஓஹோ! நிஜமாவா சொல்றீங்க.? அப்புறம்.

நிகழ் காலத்தில் வாழாமல் எப்போதும் எதையாவது நினைத்து கொண்டே இருப்பார்கள். இதன் பிற்கால விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஈடுபாடின்மை. இது பொதுவானது  இந்த துறையில் இது அதிகம்.எளிதாக லட்சங்களில் புரள்வதால் பணத்தின் அருமையை உணராமல் செலவு செய்வது,உறவை மதிக்காமல் உதறுவது மற்றும் மன அழுத்தம் காரணமாக குடி, புகை, போதை பழக்கங்களில் சீக்கிரம் சிக்கி கொள்வது,உடலுறவில் நாட்டமின்மை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பமின்மை அல்லது இயலாமை இதனால் ,விவாகரத்து பிரிவுகள், புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இல்லாதிருந்தல்,வெளிநாட்டு மோகம் மற்றும் ஜோதிடத்தில் அபார ஈடுபாடு, இவையெல்லாம் ஐ.டி துறையால் வளர்த்து விடப்பட்ட கலாச்சார சீர்கேடாக நான் பார்க்கிறேன்.

இத்தன சொல்றீங்களே. நீங்க மட்டும் எப்படி இவ்வளோ வருஷம் தாக்கு பிடிச்சீங்க.?

ஹா! ஹா! என்னங்க ஆனந்த். உங்களுக்கு இவ்வளோ சொல்லும் போதே தெரிய வேணாம். நான் இருக்கற இடம் தெரியாம வளர்ந்த டைப் ஆளுங்க.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top