HotPicks

கிரெடிட் கார்டு வாங்குவது நல்லதா? கெட்டதா? இந்த நிபந்தனை தெரியாமல் வாங்கினால் மொத்த சொத்தையும் எழுதிக்கொடுக்கணும்! இதிலும் லாபத்தை அள்ளும் தந்திரம் இருக்கு!

Dec 04 2021 02:14:00 PM

எந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதாக இருந்தாலும், அதனுடைய உபயோக கோட்பாடுகளையும், அதை வழங்கும் நிறுவனத்தின் வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும் நன்கு படித்து உணர்ந்து, அவைகளை பின்பற்ற முடியும் என்றால், வாங்கி உபயோகித்தல் எந்த சிரமும் வராது. அவச கதியில் படிக்காமலோ வாங்கினால் அல்லது வாங்கி வரைமுறைகளை பின்பற்றாமல் இருந்தால், நட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. என்னை பொறுத்தவரை பல இடங்களில் அது எனக்கு கை கொடுத்துள்ளது. சரியாக உபயோகப்படுத்தினால் நல்ல உபயோகம். 

credit-card cibil-score debit-card

"அடிச்சுவிடு ஆனது ஆகட்டும்" என்கிற மனநிலையில் இருந்தால் உடுத்த உடை இருக்காது. நான் பத்து ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். அவர்கள் அடிக்கடி ஆஃபர்கள் மூலம் நமக்கு மணி அடித்து கொண்டே இருப்பார்கள். என்ன தேவையோ அதில் மட்டும் கவனம் செலுத்தினால், கிரெடிட் கார்டுகள் எந்த இடையூறுகளையும் உண்டாக்காது. சரியாக கட்டினால் 45 நாட்களுக்கு வட்டியில்லாத கடன் வாங்கலாம். முடிந்த வரை அந்த மாத பில்லின் முழுத்தொகையை, அந்த மாதமே செலுத்தி விடுவது மிகநல்லது. இதில் தவறுபவர்களை வைத்தே கிரெடிட் கார்டு கம்பெனிகள் பணம் சம்பாதிக்கின்றன.

credit-card cibil-score debit-card

உங்க வங்கிக்கணக்கில் வெறும் 10 ஆயிரம் ரூபாய் தான் உள்ளதென்றால், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்க முயற்சிக்கக் கூடாது. அதற்கு பதிலாக அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் தளங்கள் வழங்கும் 12 மாத வட்டியில்லா மாததவணை முறையை கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். கிரெடிட் கார்டில் பணம் எடுத்துவிட்டு, சரியான தேதியில் கட்டாமல் விடும்போது தான், அதனுடைய மோசமான மறுபக்கத்தை மக்கள் உணர ஆரம்பிக்கின்றனர். சரியான தேதியில் பணம் கட்டாமல் விடும்பொழுது, மிக அதிக வட்டி, தாமதமாக செலுத்தியதற்கான கட்டணம் என உங்களுக்கு அட்டாக் வரும் அளவிற்கு பில் கைக்கு வரும்.

credit-card cibil-score debit-card

என்னை பொறுத்த வரை கிரெடிட் கார்டு பயன்படுத்துவது நுணுக்கமான கலையாகும். ரொட்டேஷனுக்கு காசு தேவைப்படும் ஆட்களுக்கும், வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் ஆட்களுக்கும் இதனை வைத்து பணம் சம்பாரிக்கும் முறை தெரியும். சிலர் கிரெடிட்கார்டு சலுகைகளை பயன்படுத்தி பணத்தை சேமிகின்றனர். பலர் அதை பயன்படுத்தி பணத்தை வீண் விரயம் செய்கின்றனர். கார்டு வாங்கிவிட்டோமே என்று வீண் செலவு செய்ய வேண்டியதில்லை, நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கூட யாரும் கேட்கப்போவது இல்லை. கிரெடிட் கார்டு என்பது வங்கிகள் மூலம் உங்களுக்கு போடப்படும் தூண்டில், அதில் சிக்காமல் இரையை எடுக்க வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கு.