Hugs & Kisses

இந்த மாதிரியான நேரங்களில் பெற்றோர் செய்யும் சில விஷயங்கள் தான் பிள்ளைகளை த*வறான முடிவெடுக்க செய்கிறது!

Jul 19 2021 02:10:00 PM

நம்ம வீட்டில் உள்ள குழந்தைகளை அவர்களின் இஷ்டம் போல் வளர்க்க வேண்டும், இது ஒரு வகை பெற்றோர் செய்யும் செயல். மற்றொன்று நம்ம நெனச்சபடி அவங்க வளரணும், இதுவும் ஒருவகை பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் முறை. குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஆனால் அவங்க ஒரு பிரச்சனை என்று நம்மிடம் வரும்போது அந்த பிரச்சனைக்குள் சென்று அவர்களுக்கு உதவ வேண்டும்.

how children help parent

உதாரணமாக ஒரு குழந்தை தன் தாயிடம் அம்மா எங்க டியூஷன் மாஸ்டர் என்ன த*ப்பான கண்ணோட்டத்தோட பாக்குறாரு, அவர் என்னோட அ*ந்தரங்க பகுதிகளில் தொட்டு பேசுறாரு என்று சொன்னால் பதிலுக்கு அந்த அம்மா என்ன பண்ணுவாங்க தெரியுமா? உனக்கு டியூஷன் போக விருப்பமில்லை. அதனால் தான் நீ தேவை இல்லாம இப்படி பொ*ய் சொல்லுற என்று சொல்லி அ*டிப்பார்கள்.

how children help parent

ஒரு பெண் தன்னுடைய முன்னாள் காதலனால் பிளாக் மெயில் செய்யப்படுகிறாள். அந்த பெண்ணின் அ*ந்தரங்க புகைப்படங்களை வைத்து முன்னாள் காதலன் அந்த பெண்ணை தொடர்ந்து பிளாக் மெயில் செய்துவருகிறான். இந்த சூழ்நிலையை ஒரு பெண் தன் வீட்டில் சொல்லும்போது அந்தப்பெண்ணின் பெற்றோர் நீ எங்க குடும்ப மா*னத்தையே கெ*டுத்துட்ட, உன்னால எங்க எல்லாருக்கும் கெ*ட்ட பேரு தான் என்று அந்த பெண்ணை தி*ட்டுவார்கள். அந்த பெண்ணும் வேறு வழியே இல்லாமல் சில நாட்களில் த*ற் கொ*லை செய்துகொள்வார்.

how children help parent

எந்த ஒரு பெற்றோரும் இது போன்ற சூழ்நிலைகளில் தங்கள் குழந்தைக்கு கை கொடுக்க வேண்டும். நாங்க உன்கூட இருக்கோம், இந்த பிரச்சனையை நம்ம சரி பண்ணிக்கலாம், நீ எதுவும் க*வலைப்பட வேண்டாம் என்று தைரியம் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எ*ரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊத்துவதைப் போல பேசினால் உங்க குழந்தைகளை நீங்கள் இ*ழந்து விடுவீர்கள்.

how children help parent