Spellbound

#90sKids: குழந்தை பருவத்தில் குதற்கமா யோசித்த அப்பாவித்தருணங்கள்!

Feb 12 2020

குழந்தைப் பருவத்தில் நீங்கள் எந்த அளவு அப்பாவித்தனமாக இருந்தீர்கள் என்று இதனை வைத்தே கண்டுபிடித்து விடலாம். 

90s-kids,-memory

#1. ஆராய்ச்சி 1 - "ஏரோபிளான் தான் ரொம்ப உயரமாக பறக்கும்" என்று நண்பன் சொல்ல, "கழுகு தான் ஏரோபிளானை விட உயரமா பறக்கும்" என்று வாதாடி சண்டை போட்டார் நண்பர் வீரக்குமார். சில சமயம் கழுகுக்கு பதிலாக அனுமாரையும் சொல்லியிருக்கிறார்.

#2. ஆராய்ச்சி 2 - "பாம்பு கடிச்சா வாயில நுரை வந்து செத்து போய்டுவோமா" என்று தம்பி கேட்க, "பாம்பு வரும்போது அது பக்கத்துல போய் மண்டிபோட்டு நாகராஜா என்னை கடிக்காத அப்படின்னு கையெடுத்து கும்பிட்டு அதுக்கு பால் ஊத்துனா, அது குடிச்சுட்டு பேசாம போய்டும்டா மக்கு, இது தெரியாதா உனக்கு " என்று கூறியிருக்கிறார்.

#3. ஆராய்ச்சி 3 - இருட்டு வீட்டுக்குள்ள டார்ச் லைட் அடிச்சா நமக்கு எல்லாமே வெளிச்சமா தெரியுது. அப்ப இருட்டா இருக்குற வானத்துல அடிச்சு அங்க என்ன இருக்குனு பார்ப்போம் என்று முடிவெடுத்து பல முறை பேட்டரி காலி ஆகிற வரைக்கும் வானத்துல லைட் அடிச்சு அடிச்சு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்திருக்கிறார்.

#4. ஆராய்ச்சி 4 - படத்துல கூட ஹீரோ சில காட்சிகளில் லைட் ஸ்விட்சை ஆப் பண்ணுவார். அந்த சமயத்துல டார்ச் லைட் எடுத்து டிவில அடிச்சு பார்ப்போமான்னு கூட அந்த நேரத்துல தோணியிருக்கு.

#90sKids: இது போக ஒரு நெருப்பு குச்சி ஒரே வைக்கோலை கொளுத்துமா அல்லது வைக்கோல்போர் முழுவதையுமா என்று பரீட்சை செய்தவர்கள் எல்லாம் உண்டு.