HotPicks

வீட்டுக்கடன் என்ற பெயரில் விழுங்க காத்திருக்கும் மோ சடி! இவங்களுக்கு EMI கட்டியே தண்டம் அழ வேண்டுமா? வேண்டாமே வி ஷப்பரீட்சை!

Feb 07 2021 11:34:00 AM

வீட்டு லோன் எடுக்க உள்ளதால் அது குறித்து சில தகவல்களை திரட்ட ஆரம்பித்தோம். பின்னர் தான் எங்களுக்கு தெரியவந்தது, எல்லா கடன்களை காட்டிலும் வீட்டு கடன் தான் அதிக நன்மைகளை கொண்டுள்ளது என்று. மற்ற கடனை விட வீட்டு கடனில் தான் குறைந்த வட்டி வழங்கப்படுகிறது. அசல் மற்றும் வட்டித்தொகை இரண்டிற்குமே வருமான வரி சலுகைகள் உண்டு. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடன் எடுத்தால் இருவருக்கும் வரிச்சலுகை உண்டு.  வீட்டுகடனை பொறுத்தவரையில் part payment மற்றும் pre-closure என எந்த அ பராதமும் இன்றி அனுமதிக்கப்படுகிறது.

housing-loan-eligibility home-loan

இந்த காலத்தில் நாம் வீட்டுக்கடன் எடுக்காமல் சொந்தமாக வீடு வாங்க முடியாது. வீடு கட்ட தேவையான மெட்டீரியல்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கையில் முழுகாசையும் வைத்துக்கொண்டு வீடு கட்டுவது இந்த காலத்தில் நடக்காத காரியம்.

housing-loan-eligibility home-loan

வீட்டு கடன் எடுப்பதிலும் சில சி க்கல்கள் உண்டு. EMI தொகை மாத வருமானத்தில் 40% அதிகமாக இருந்தால், மற்ற நிதி இலக்குக்கு உங்களால் பணத்தை ஒதுக்க முடியாது. ஏனெனில் அடுத்தடுத்து செலவு வந்து கொண்டே இருக்கும். EMI தொகை காரணமாக இடம், தங்கம் போன்ற இதர செலவுகளுக்கு போதுமான தொகையை ஒதுக்க முடியாது. வீட்டுக்கடன் எடுத்த ஆரம்ப காலத்தில், வட்டி அதிகமாக இருக்கும், அசல் தொகை குறைவாக இருக்கும். ஆகையால் முதல் சில ஆண்டுகளில் அசல் தொகை குறையாது. இந்த கணக்கீட்டை உங்களது அசலுக்கும் மாத தவணைக்கும் கணக்கிட்டு பாருங்கள். 

housing-loan-eligibility home-loan

முடிந்தவரை LIC போன்ற நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், HDFC போன்ற,வங்கிகளிலும் வீட்டுக்கடன் எடுங்கள். சிலருக்கு, வீட்டுக்கடன் வாங்குவது சாதகமானதா? இல்லை Overdraft FD எடுப்பது நல்லதா? என்ற சந்தேகம் இருக்கும். இந்த இடத்தில் சந்தேகமே வேண்டாம் ஏனெனில் வீட்டுக்கடனில் தான் குறைவான வட்டி, வரிச்சலுகை பெற முடியும். வீட்டுக்கடன் வாங்கிய பின்னர், ஒவ்வொரு முறை 
EMI தொகை கட்டும்போதெல்லாம், நீங்க இன்னும் கட்டவேண்டிய அசல், வட்டி எல்லாம் ஒவ்வொரு முறையும் கணக்கிட்டு கொள்ளுங்கள். 

housing-loan-eligibility home-loan

ஏனெனில் நண்பர் ஒருவருக்கு எல்லா தொகையும் கட்டியபின்னர் வீட்டின் பத்திரத்திற்காக காத்துக்கொண்டிருந்த போது, மூன்று லட்சம் நிலுவை இருக்கு என கூறி டாக்கியூமெண்ட்டை கொடுக்க மறுத்துவிட்டார்கள். வீடு தொடர்பான பத்திரங்களை வாங்க செல்வதற்கு முன்னர் நிலுவை பணத்தை காரணம் காட்டி நிலுவையில் போட்டுவிட்டனர், அவர் பேங்க் வாசலிலே உட்கார்ந்துகொண்டார். பின்னர் மீண்டும் நண்பர், நகையை அடமானம் வைத்து மூன்று லட்சம் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்து, வங்கிக்கு பெரிய கும்பிடு போட்டு பத்திரங்களை வாங்கிவந்தார். அவரை பார்த்து EMI தொகை கட்டும் நாங்க எல்லோரும் உஷாராக கணக்குகளை மெயின்டைன் செய்து வருகிறோம். காசு விஷயத்தில் கொஞ்சம் கூட அசரகூடாது என்பதற்காக தான் இந்த பதிவு.