HotPicks

நம்மை நோ யாளி ஜீவனாக்கும் இக்கால கட்டிடக்கலை! வீடு கட்டும்முன், இனியாவது இன்ஜினியரிடம் இதனை மாற்ற சொல்லுங்க! எல்லோரும் ஒரே குட்டையில் விழ வேணாமே?

Apr 29 2021 11:50:00 AM

முற்றம் வைத்த பழைய வீடுகளை பார்த்தது உண்டா? அதன் அழகு நம்மை கவரும். முற்றம் உள்ள வீடுகள் எல்லாம் முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையை அழகாக கூறும் சுவடுகள். மனிதன் தனித்து வாழ கூடாது. மற்ற இனங்களை போலவே அவனும் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டி தான் அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் எல்லாமே முற்றத்துடன் கட்டப்பட்டுள்ளன. வெயில், மழை உள்ளேவரும்படி சதுர வடிவில் மேற்கூரை இல்லாமல் அமைக்கப்படும் பகுதியை முற்றம் என்பார்கள். சுற்றிலும் தூண் வைத்து, ஒரு குடும்பம் மட்டுமல்ல ஒரு விருந்தே போடும் அளவிற்கு இடவசதி கொண்ட வீடாக இருக்கும். ஏனெனில் அந்த காலத்தில் எல்லாமே கூட்டு குடும்பம் தானே? வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இந்த வீட்டின் சுற்றளவும் குறையும். 

home-construction real-estate

விருந்து என்றால் முற்றத்தை சுற்றியுள்ள பகுதியில் உணவு பரிமாறுவார்கள், முற்றம் உள்ள பகுதியில் வத்தல், வடாம், மிளகாய் காய போட, துணி துவைத்து காயபோட என இப்படி பயன்படுத்துவார்கள். பழைய நண்பர் வீடு இப்படித்தான் இருக்கும். முற்றத்தில் அமர்ந்து கொண்டு அதிகாலை சூரியனின் இள வெயிலை அனுபவித்துக்கொண்டு, டீ குடித்து கொண்டே பேப்பர் படிப்பார். பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும்.

home-construction real-estate

ஞாயிற்றுக்கிழமை என்றாலே எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டி, தேய்த்து கொண்ட எண்ணெய்யை காயவைக்க வீட்டு முற்றத்தில் அமர்ந்துகொண்டு குடும்பத்தோடு அந்த நாளை கழிப்பார்கள். அதுவும் பவுர்ணமி அன்று லைட்டே போட தேவையில்லை. மின்சாரம் இல்லாதபோதுகூட, முற்றத்தில் குடும்பமே நிம்மதியாக தூங்கும். 

home-construction real-estate

இது போன்ற வீடுகளில் வசிக்கும்போது, கண்டிப்பாக மனஅழு த்தம் வராது. சொர்க்கம் பற்றி தெரிந்தால் தானே நரகம் பற்றி தெரிய? பிறந்ததில் இருந்து ந ரகத்திலே வாழ்பவர்களுக்கு அது பழகிபோயிருக்கும். இப்போது இது போன்ற வீடுகளை கட்டினால் செலவு அதிகமாகும் என நம்மக்கள் எளிமையாக வீடு கட்ட பழகிவிட்டோம். 

home-construction real-estate

வீட்டிற்குள் பரவலாக சூரிய வெளிச்சம் பரவி கி ருமி தொ ற்றுக்களை அகற்றி வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி, வாழும் வீட்டை பார்த்து பார்த்து கட்டியுள்ளார்கள். மழை காலத்தில் வீணாகும் மழைநீரை வீட்டிற்குள் சேமித்து வைக்கும்படி கட்டுமானம் இருக்கும். இப்படி இருக்கையில், வெயில் காலத்தில் கூட வீட்டின் வெப்பசமநிலை கட்டுக்குள் வரும். ஆனால் இப்போதுள்ள நவீன கட்டடகலை, இயற்கையோடு ஒத்துவாழும்படி உள்ளதா? வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் இருக்க முடியுமா? மாடர்ன் வீடு என்ற பெயரில் பழமையை மறந்துவிட்டோம்.