HotPicks

#Loan: இந்த நேரத்தில் லோன் போட்டு சொந்த வீடு கட்டலாமா? கொரோனா ரூபத்தில் காத்திருக்கும் சூனியம்!

Jun 24 2020 10:19:00 AM

முன்ன எல்லாம், வாடகை வீட்டுக்கு கொடுக்கும் காசுக்கு, லோன் போட்டு வீடு கட்டினால், வீடும் நமக்கு சொந்தமாகும், வாடகை பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கை இருந்தது. இப்போ அதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அரசு வேலையை தவிர, வேறு எந்த வேலையில் இருந்தாலும், வருமானத்தை நம்பி லோன் பக்கம் எட்டிப்பார்க்கவே கூடாது.

house loan own-house

25 இலட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்ட வேண்டும் என்பது உங்கள் பிளானாக இருந்தால், கையில் குறைந்தது 15 இலட்சம் இருக்க வேண்டும். 10 இலட்சம் லோன் போட்டால் தப்பித்து கொள்ளலாம். ஒரு சிலர் கையில் 5 இலட்சத்தை வைத்துக்கொண்டு, 20 இலட்சம் லோன் போடலாம் என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

house loan own-house

தொகை கூடுதலாகும் போது, தவணை கட்டும் காலமும் அதிகமாகும். ஒரு 20 வருடத்திற்கு தவணை செலுத்த வேண்டி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த 20 வருடம் கடப்பதற்குள் போதும், போதும் எனபது போலாகி விடும். இடையில் செய்யும் வேலையில் பிரச்சனை வந்தாலும், லோன் கட்ட வேண்டுமே என்ற கட்டாயத்தில் சகித்துக்கொண்டு ஓட வேண்டி வரும்.

house loan own-house

அகலக்கால் வைப்பதற்கு முன்னர் யோசித்து வைக்கவேண்டும் என்று பெரிவாங்க சொல்வது இதற்காகத்தான். பிறரை பார்த்து, அவர்களைப்போல வாழ வேண்டுமென்று வீம்புக்கு லோன் போட்டு, நெருக்கடியில் சிக்கியவர்களை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் சொல்வது, "மொத்த மதிப்பில் முக்கால்வாசி பணம் கையில் வைத்துக்கொண்டு, ஆரம்பித்திருக்க வேண்டும்" என்பது தான்.

house loan own-house

அதுவும் இந்த கொரோனா காலத்தில், எந்த வேலை எப்படி மாறும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பணி நிரந்தரமானவர்களைக்கூட எப்படி தூக்கலாம் என்று ஒரு சில நிறுவனங்கள், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்துக்கொண்டிருக்கின்றன. இப்படியான சிக்கல் இருக்கும் போது எதையும் யோசித்து செய்வது நல்லது. சேமித்து வைத்த பணத்தை சூதானமாக கையாள வேண்டும்.

house loan own-house

அநாவசிய செலவுகளை குறைத்துக்கொண்டு, சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் சில வருடங்கள் நமக்கு சவால் மிகுந்தவையாக இருக்கலாம். 25 இலட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு 20 இலட்சம் லோன் போடுவதற்கு பதில், கையில் இருக்கும் 5 இலட்சத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் நிலத்தை வாங்கிக்போட்டால், அதன் மதிப்பு பெருகும்.