Around me

உலகக்கோப்பை தொடரில் பந்து வீசுவாரா பாண்டியா? பேட்டிங்கில் சோபிக்கவில்லையெனில் அணியில் தொடர்வது கஷ்டம் தான்!

Oct 16 2021 03:57:00 PM

20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஒரு சில நாட்களில் தொடங்கவிருக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருப்பதால் இந்திய அணியின் மீது பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபகாலமாக பந்து வீசுவதில்லை. முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதில் இருந்தே அவர் அதிகம் பந்து வீசுவது இல்லை.

hardik-pandya indian-team

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பே வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் அவர் இன்னும் பந்துவீசும் அளவுக்கு உடற்தகுதி பெறவில்லை என்பதாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு உடற்தகுதி இன்னும் பெறவில்லை என்பதால் அவர் பந்துவீசாமல் இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். இருப்பினும் பாண்டியா ஒரு அதிரடி ஆட்டக்காரர் மற்றும் சிறந்த பீல்டர் என்பதால் அவரை அணி நிர்வாகம் விட்டுத்தராமல் இருக்கிறது.

hardik-pandya indian-team

பந்து வீசமுடியவில்லை என்றாலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தி அணியின் பின்வரிசையில் பினிஷர் ரோலில் பாண்டியா விளையாடுவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுவதால் பாண்டியா பேட்டிங்கில் சொதப்பினால் அவருக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.

hardik-pandya indian-team

அறுவை சிகிச்சை காரணமாக பந்துவீச முடியாமல் இருப்பது ஒரு பக்கம் பிரச்சனையாக இருக்கும் நிலையில் மறுபுறம் அவரது பேட்டிங் திறனும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் பெரிய அளவில் வெளிப்படவில்லை. உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் இந்திய அணியில் பாண்டியா தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகம் தான்.