HotPicks

நெய் சொட்டச்சொட்ட நாவில் கரைந்து போகும் இருட்டுக் கடை அல்வா!

Feb 18 2020

your image

அல்வான்னு சொன்ன உடனே கண் முன் திருநெல்வேலி வந்து நிற்கும். சம்பா கோதுமையுடன், பால், நெய் கலந்து, சர்க்கரை, முந்திரி சேர்த்து பக்குவமான பதத்தில் கிளறிய அல்வாவை இலையில் போட்டு ருசித்தால், அடா! அடா! அமிர்தம் கூட தோற்றுப்போய்விடும் இதன் முன்னால்.

ஊரில் இத்தனை அல்வா கடை இருந்தாலும், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவுக்கு மட்டும் எப்படி, தனி ருசி வருகிறது.? 

எல்லாம் தாமிரபரணி தண்ணீரும், கையால் அரைத்த சம்பா கோதுமையும் செய்யும் மாயம் தான். என்ன டெக்னாலஜி வந்தாலும், இன்னும் கையால் பதம் பார்த்து அரைக்கப்படும் கோதுமை மாவு, அல்வாவுக்கு தனி ருசியை கொடுக்கிறது.

கேக் மாதிரி கத்தியால் வெட்டப்படும் அல்வாவை பார்த்த நம்மிடம், வழவழவென நெய் சொட்டச்சொட்ட, நாவில் வைத்த உடனே கரையும் அல்வாவை கொடுத்தால் சும்மாவா இருப்போம்? முந்திரி பருப்போடு சுரண்டி எடுத்து, ஒரு துளி கீழே சிந்தாமல், மனதை லேசாக்கிக்கொண்டு சுவைத்து விடுவோம்ல.

அந்த மாதிரியான பதத்தில் செய்யப்பட்ட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை, திருநெல்வேலிக்கே போகாமல், இப்போதே நீங்கள் இருக்கும் இடத்தில் வாங்க முடியும். உடனே வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Top