His & Her

ஐ படத்தில் வரும் விக்ரம் மாதிரி மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எந்த கேரக்டர் என்று யூகிக்க முடிகிறதா?

Oct 16 2021 11:18:00 AM

படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்திருப்பார். மாறக்கூடாத கெட்டப் என்றால் எதுவாக இருக்கும்? கண்டிப்பாக அந்த கூன் விழுந்த முடி உதிர்ந்த கெட்டப் தான். முடி உதிர்தலைத் தடுக்க என்ன செய்யலாம்? முடி உதிர்வதைத் தவிர்க்க நாம் என்ன சாப்பிடலாம் என்பது பலருக்குத் தெரியும். ஆனால் என்ன சாப்பிடக்கூடாது என்று பலருக்கு தெரியாது. முதலில் எதைச் சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

hair-fall avoid-these-foods

நாம் அன்றாடம் செய்யும் சிறிய விஷயங்கள்தான் நமக்குத் தெரியாமல் அதிக முடி உதிர்தலுக்கும் வழுக்கைக்கும் முக்கிய காரணம். சமீப காலமாக இளைஞர்களிடையே இந்த வழுக்கை தலை பிரச்சனை மிகவும் அதிகமாக உள்ளது. இதைத் தவிர்க்க என்ன சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம் வாங்க.

hair-fall avoid-these-foods

சர்க்கரை என்று அழைக்கப்படும் வெள்ளை சர்க்கரையை உட்கொள்வது நமது உச்சந்தலையில் சர்க்கரை ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நமக்கு முடி உதிர்வது அதிகமாகிறது. வெள்ளைச் சர்க்கரை எல்லாவற்றிலும் உள்ளது. சாக்லேட் மற்றும் கேக் போன்ற இனிப்பு எல்லாவற்றிலும் இந்த வெள்ளை சர்க்கரை அதிகமாக உள்ளது. இதற்காக சாக்லேட், கேக் இவற்றை சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை. முடிந்தவரை குறைவாக சாப்பிடுங்கள்.

hair-fall avoid-these-foods

ஆல்கஹால் அருந்துவது டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனின் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இது வழுக்கை மற்றும் முடி மெலிந்து போக வழிவகுக்கும். புகைபிடித்தல் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த உடல் மாற்றங்கள் மயிர்க்கால்களை பாதித்து வழுக்கையை ஏற்படுத்தும்.

hair-fall avoid-these-foods

நாம் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போதும், ​​சோடியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போதும் அதிக முடி உதிர்தல் ஏற்படுகிறது. நாம் வெளியே செல்லும் போது இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறைய சாப்பிடுகிறோம். அதிகமான மக்கள் துரித உணவு மற்றும் பாக்கெட்டில் அடைத்த உணவை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். துரித உணவு கலாச்சாரம் முடி உதிர்வதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. எனவே இந்த உணவுகளை தவிர்ப்பதே சிறந்தது.

hair-fall avoid-these-foods

இந்தக்காலத்து வாலிபர்கள் இரவில் சரிவர தூங்குவதில்லை. சரியான தூக்கம் இல்லாதது முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். முடி உதிர்தலுக்கு மன அழுத்தம் ஒரு பெரிய காரணம். அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும் போது, ​​உடல் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. இது உடலின் இயல்பை மாற்றுகிறது. இது மயிர்க்கால்களை சேதப்படுத்தி முடி உதிர்தல் ஏற்பட காரணமாக இருக்கும்.

hair-fall avoid-these-foods

எனவே முடி உதிர்தல் மற்றும் வழுக்கையை தவிர்க்க இந்த பழக்கங்களை மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறு செய்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பாதிப்பை குறைக்கும். இது மட்டுமல்ல இன்னும் பல காரணங்கள் உள்ளன. உங்களுடைய முடி உதிர்தல் பிரச்சனையை சரிசெய்ய நினைத்தால் மேற்கூறிய உணவுகளை முடிந்தவரை குறைத்து சாப்பிடுங்கள் மக்களே. உங்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். எல்லா நேரத்திலும் வீட்டு வைத்தியம் பலனளிக்காது.