HotPicks

#beard: ஆண்களுக்கு தாடிமீசையை ஆண்டவன் எதற்காக வைத்தான் தெரியுமா?

Jul 31 2020

இயற்கையிலே ஆண் பெண் இருவருக்கும் ரோம வளர்ச்சி இருக்கும். பிறப்பிலிருந்தே நாம் செய்யும் சில விஷயங்களால் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. ஏதோ ஒரு படத்தில் காமெடி நடிகர் வடிவேலு சொல்வதை போல்தான், சின்ன வயது முதலே எங்க அம்மா மஞ்சள் பூசி குளிப்பாட்டியதால் தான் முகத்தில் மீசையே வளரவில்லை. அதனாலே பென்சிலில் மீசை வளர்த்து வச்சுருக்கேன் என்பார். அவ்வாறே, பெண் குழந்தை என்றால், மஞ்சள் பூசி குளிப்பாட்டி விடும்போது, தாடி மீசை வளர்ச்சி தடைபடுகிறது.

grow-beard full-beard

ஆண்களுக்கு அதிகமாக சுரக்கும் டெஸ்டிரோசன் ஹார்மோனில் இருந்து டி.எச்.டி ஹார்மோன் அதிகமாக தூண்டப்படும்போது தான் முகத்தில் ரோம வளர்ச்சி துவங்குகிறது. பெண்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாகவே சுரப்பதால் அவர்களுக்கு மீசை, தாடி வருவதில்லை. 

grow-beard full-beard

அதெல்லாம் இருக்கட்டும் ஆண்களுக்கு ஏன் ஆண்டவன் தாடிமீசையை வைத்து அனுப்பினான் என நீங்க கேட்க வருவது புரிகிறது. பெண்கள் வயதிற்கு வந்துவிட்டதை எப்படி மாதவிடாய் சுட்டிக்காட்டுகிறதோ அப்படித்தான் ஆண்களுக்கும் அரும்பு மீசை முளைக்க ஆரம்பிப்பது அவர்கள் வயதிற்கு வந்ததன் அடையாளமாம். ஆனால் இன்று தாடி வைத்த ஆணை பிடிக்குமா க்ளீன் ஷேவ் செய்த ஆணை பிடிக்குமா என விவாதம் செய்யும் அளவிற்கு தாடி முக்கிய அங்கமாக உள்ளது.  

grow-beard full-beard

முன்னொரு காலத்தில் தாடி இருந்தால் காட்டுமிராண்டிகள் போலவும் க்ளீன் ஷேவ் செய்தால் நாகரீகம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது இந்த நிலை அப்படியே தலைகீழ்.  எல்லாமே சந்தைப்படுத்தல் தான். முன்னர் ஷேவ் செய்யும் கருவி, இப்போது தாடி வளர தேவையான ஆயில் அவ்வளவுதான். இந்த ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும். நாமும் அப்டேட் ஆக வேண்டும். எங்கேயோ யாரோ முதலாளியாக வாழத்தான் இந்த ட்ரெண்ட், நாகரீகம் எல்லாமே! 

grow-beard full-beard

சிலர் ஷேவ் செய்ய செய்யத்தான் அதிகமாக தாடி வளரும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கும் இதற்கும் சமந்தம் இல்லை என்பது தான் அறிவியல் ரீதியான உண்மை. தாடி வளர்ச்சி என்பது ஜீன்களை பொறுத்தே சிலருக்கு வேகமாக வளர்கிறது. சிலருக்கு முப்பது வயதை கடந்தாலும் வளராமல் உள்ளது. 

grow-beard full-beard

தாடி வைக்கலாமா? கூடாதா? என்ன சொல்ல வரீங்க? என நீங்க கேட்க வருவது புரிகிறது. தாடி வைப்பது வைக்காதது எல்லாம் அவரவர் இஷ்டம். ஆனால் தாடியே வளராத முகத்தில் 'அதை தடவி இதை தடவி தாடி வளர செய்கிறோம்' என்றால் நம்பி ஏமாற வேண்டாம். செயற்கையான தாடி வளர்ச்சி என்பது நடக்காத ஒன்று. அப்பாவிற்கு தாடி இருந்தால் மகனுக்கும் தாடி அடர்த்தியாக இருக்கும் இல்லையெனில் அம்மாவின் அப்பாவிற்கு அதாவது தாத்தாவிற்கு உள்ளதை பொறுத்து நமக்கும் தாடி வளருமா வளராதா என்பதை தெரிந்துகொள்ளலாம். மற்றபடி ஏனைய ஏமாற்று விளம்பரங்களை நம்ப வேண்டாம்.