Misc

மீன்மழை பெய்வது உண்மைதானா? அது எப்படி சாத்தியம்? அந்த மீனை உண்ணலாமா?

Nov 26 2020 12:33:00 PM

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது. பெரும்பாலும் எல்லோரும் பார்த்திருப்போம். மீன் மழை பெய்து, அந்த மீனை சிலர் வீட்டிற்கு அள்ளி கொண்டு போவது போல அந்த காணொளி அமைந்திருக்கும். நம்மூரில் விவாசாயத்திற்கே மழை பெய்ய மாட்டேங்குது, வெளிநாட்டில் என்ன மீன் மழையெல்லாம் பெய்யுது? இதெல்லாம் உண்மையா? என்ற ஆர்வத்தோடு இது குறித்து தேடிய போது கிடைத்த பதிலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

fish-rain mumbai

உண்மையில் இந்த மீன் மழை சாத்தியம். உலகின் பல்வேறு இடங்களில் இது நடந்தேறியுள்ளது. 1861 இல் சிங்கப்பூரில், 1900 இல் நேபாளத்தில், 1903 இல் கனடாவில், 2017 இலங்கையில், 2013 இல் சென்னையில் இந்த மீன் மழை பெய்துள்ளது. இப்போது சமீபத்தில் 2020 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் பெய்துள்ளது. 

fish-rain mumbai

இது எப்படி சாத்தியம் என்றால், பருவநிலை காரணமாக அடிக்கடி கடல் பகுதியில் சூ றாவளி ஏற்படும். இதனால் சில சமயங்களில் கடலில் சூழல் காற்று வானத்தை நோக்கி வீசும். ஆழமான காற்றானது சில நேரத்தில் கிலோமீட்டர் தூரத்திற்கு வானத்தை நோக்கி வீசும். இந்த சூழல் காற்றுடன் கூட்டமாக மீன்களும் மாட்டிக்கொள்ளும். பெரும்பாலான நேரத்தில் இந்த காற்றானது கடலுக்குள்ளே முடிவடைந்துவிடும் என்பதால் மீன்கள் செ த்து கரை ஒதுங்கும் அல்லது கடலுக்குள்ளே தப்பி பிழைக்கும். 

fish-rain mumbai

சில நேரத்தில் கரையை கடக்கும் சூ றாவளி காற்றானது மழையை பெய்விக்கும். அந்த நேரத்தில் சூழல் காற்றில் மாட்டிக்கொண்ட மீன்களும் மழை வழியாக நாம் வாழும் பகுதியை சென்றடையும். இந்த மழையில் மீன் மட்டும் இருக்காது, சூ ழலில் மாட்டிக்கொண்ட தவளை, பாம்பு எல்லாமே இருக்கும். 

fish-rain mumbai

கடல் பகுதியில் உள்ள ஊர்களில் 90% மீன் மழைக்கு வாய்ப்புண்டு. இது இல்லாமல் ஏரி, குளம், ஆறு  உள்ள பகுதிகளிலும் இது சாத்தியமாம். ஈரான் நாட்டில் கடலே இல்லாத டாப்ரெச் எனும் ஊரில் மீன் மழை பெய்துள்ளது. ஆதலால், நம்ம ஊரில் எங்க கடல் இருக்கு? மீன் மழை எல்லாம் இங்கு பெய்யுமா? என யோசிக்காமல், திடீரென மீன் மழை பெய்தால், யோசித்து கொண்டிருக்காமல் பெரிய பாக்கெட்டில் வாரி போட்டுகொண்டு மீன் குழம்பு வைக்கிற வேலையை ஆரம்பிச்சுடுங்க.