Misc

வாலிபரின் தொண்டைக்குள் உயிருடன் புகுந்த மீன்! பின் ஊசியில் தொடங்கி எதையெடுத்தாலும் வாயில் வைக்கும் பழக்கம் உள்ளவங்க, இதை படித்தாலாவது புத்தி வருமா?

Jul 21 2021 06:52:00 AM

ஒரு சிலருக்கு கண்டிப்பா இந்த பழக்கம் இருக்கும். ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இன்னொரு பொருளை வாயில் கவ்வி இருப்பாங்க. ஒரு வயரிங்க வேலை செய்பவர்கள் கூட, டேப்பை வாயில் வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் மின் இணைப்பு கொடுக்க வேலை செய்வாங்க. இதுவே பெண்கள் என்றால், சேலைக்கு குத்தும் சேப்டிபின் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு, சேலை கட்டிக்கிட்டு இருப்பாங்க. இதுநாள் வரையிலும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாவே தெரியல. ஆனால் இப்போ நடந்த ஒரு சம்பவம், எதிலும் உஷாரா இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

fish fish-hunting tamilnadu

காரைக்குடி பக்கம் ஒரு வாலிபர் நண்பர்களோடு சேர்ந்து மீன்பிடிக்கப்போயிருக்கிறார். வழக்கமா பிடித்த மீன்களை பத்திரப்படுத்திக்கொண்டே அடுத்த மீன் பிடிக்க தூண்டில் போடுவாங்க. இவர் என்ன பண்ணியிருக்காருன்னா, பிடித்த ஒரு மீனை வாயில் கவ்விக்கொண்டு, அடுத்த மீன் பிடிக்க தூண்டில் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாயில் கவ்வியிருந்த மீன் அப்படியே தொண்டைக்குள் நுழைந்துள்ளது. உயிர் இல்லாத மீனாக இருந்தால் கூட அசையாமல் வயிற்றுக்குள் சென்றிருக்கும்.

fish fish-hunting tamilnadu

இது உயிரோடு இருக்கும் மீன் இல்லையா? அதனால் மூச்சுக்குழலில் சென்று சிக்கிக்கொண்டது. உடனே மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையை அடையும் முன்பாகவே உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். பார்த்த சின்ன சம்பவம் போலத்தான் தெரியும். எதுவும் நம் கைமீறிப்போனால், தலையெழுத்தையே மாற்றிவிடும் என்பதற்கு இது மாதிரியான சம்பவங்கள் சிறந்த முன்னுதாரணம். இனியாவது கூர்மையான ஊசி, பேனா போன்றவற்றை வாயில் வைத்துக்கொண்டே எதையாயாவது செய்வதை தவிர்க்கப்பாருங்க.

fish fish-hunting tamilnadu

இதே மாதிரி தான் போன வாரம், கூட்டாஞ்சோறு ஆக்கப்போன இடத்தில் சானிடைசர் பயன்படுத்தியதால் ஒரு சிறுவனை இழந்தோம். அதற்குள் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு. இந்த நேரத்தில் சுத்தி நடப்பது எல்லாமே நமக்கு சாதகமாக இல்லை என்பதால், எல்லா வகையிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக எதை பார்த்தாலும் பயந்து ஒதுங்க சொல்லல. வழக்கமா நாம் செய்யும் அன்றாட செயல்களில் எதுவெல்லாம் ரிஸ்க்கோ, அதனை தவிர்த்துவிடுங்கள்.