Hugs & Kisses

திருமண நாள் அன்றே முதலிரவு பெண் வீட்டில் தான் நடக்குமா? சம்பிரதாயம் சொல்லும் சமாச்சாரம்!

Nov 17 2020 03:41:00 PM

எனக்கு தெரிந்து அதிகபட்சம் மணமகன் வீட்டில் தான் நடக்கிறது. பெண் வீட்டில் நடக்கும் சதவிகிதம் குறைவே. ஊருக்கு ஊர் சம்பிரதாயம் மாறும் என்று நினைக்கிறேன். தமிழகத்தை எடுத்துக்கொண்டால், கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியும், தென் தமிழகத்தில் ஒரு மாதிரியும், காரைக்குடி பக்கம் ஒரு மாதிரியும் திருமணங்கள் நடக்கும். இடத்திற்கு இடம் சடங்குகள் வேறுபடும். மதுரைப்பக்கம் மணமகன் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில குடும்ப வழக்கங்களின் படி மணமகனின் வீட்டிலும் நடக்கிறது.

first-night marriage wedding

ஆனால் தாத்தா பாட்டி காலத்தில் மணமகள் வீட்டில் முதலிரவு நடத்தும் வழக்கம் இருந்துள்ளது. அதற்கு சம்பிரதாயம் காரணம் கிடையாது. உளவியல் ரீதியாக மணமகளுக்கு அச்ச உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படி நடந்துள்ளது. பெண்கள் எப்போதுமே உணர்வு ரீதியாக தாம்பத்தியத்தை அணுகக்கூடியவர்கள் என்பதால், பிறந்து வளர்ந்த வீடு மனதை தளரச்செய்யும். இதுவே மணமகன் வீடாக இருந்தால், புது இடத்திற்கு போன பதற்றம் ஒரு பக்கம் வாட்டும்.

first-night marriage wedding

மணமகள் வீடாக இருந்தால் பெண்ணுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். பெண்ணின் சௌகரியமான உணர்வு மணமகனுக்கு முழு சுதந்திரத்தை கொடுக்கும். சாந்திமுகூர்த்தம்  நல்லபடியாக முடியும். அந்தக்காலத்தில் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆணும், பெண்ணும் சரியாக பேசி புரிந்துகொள்ள முடியாத காலகட்டத்திற்கு இது ஏற்றதாக இருக்கலாம். இப்போது சூழ்நிலைக்கு ஏற்ப பழக்கங்கள் மாற்றப்படுகின்றன. இடத்திற்கு இடம், சமூகத்திற்கு சமூகம் மாறுபடுகிறது.

first-night marriage wedding

அன்னைக்கு சொத்து பத்து இருந்தாலும், திருமணத்தில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் தவறாது பின்பற்றப்படும். இன்னைக்கு வசதிக்கு ஏற்ப மாறுபடுகிறது. இரு வீட்டாரின் விருப்பத்தின் பேரில் நல்ல நாள் பார்த்தும் நடத்தப்படுகிறது. முதலிரவு என்றாலே உ டலுற வுக்கு மட்டுமே என நினைத்துப் பார்க்கும் மனிதர்களுக்கு அது கொச்சையாக தெரியும். ஆனால் ஆதி காலத்தில் இருந்தே புனிதத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிகழ்வு அது.