Misc

உச்சி வெயில் நேரத்தில் மரங்களுக்கு நீர் பாய்ச்சினால் என்ன ஆகும்? காட்டுத்தீயை விட கொடுமையான இந்த செயலை செய்ய வேண்டாமே! கேட்டாலே ஷாக் ஆவோம்!

Sep 16 2020 12:30:00 PM

ஊருக்கு போயிட்டு வந்த உடனே, அவசர அவசரமாக குடத்தை எடுத்துக்கொண்டு, பைப் நோக்கி ஓடினேன். எங்க போறேன்னு அப்பா கேட்க, "போன வாரம் வெச்ச, மா மார செடிக்கு தண்ணி ஊற்றப்போறேன்" என்றேன். குடத்தை ஓரமா வெச்சிட்டு போயி தூங்குற வழிய பாரு. பகல் நேரத்துல மரத்துக்கு தண்ணி ஊத்துறானாம்னு சொல்லிவிட்டு நகர்ந்தார். எனக்கு முன்னப்பின்ன மரம், செடி, கொடி வளர்த்து பழக்கம் இல்லங்க. மரம் வளர்க்கிறேன் என்ற பெயரில், கொஞ்சம் ஆர்வக்கோளாறில் ஏதோ தப்பு செஞ்சிருக்கேன் மட்டும் தெரிந்தது.

tree water feed-water

ஒரு முறை செடி வாங்க நர்சரிக்கு போனப்ப, அங்கு விளக்கமா கேட்டு தெரிந்துகொண்டேன். ஒரு மரமோ, செடியோ நீர் பாய்ச்சுவதாக இருந்தால், காலை 6 மணி முதல் 11 மணிக்குள் பாய்ச்சிவிட வேண்டும். அதற்கு பிறகு, மாலை 5 மணிக்கு மேல் தான் நீர் பாய்ச்ச வேண்டும். எக்காரணத்தை கொண்டும், இடைப்பட்ட நேரத்தில் நீர் பாய்ச்சினால், அது வேர்களில் பாதிப்பை ஏற்ப்படுத்திவிடும். உதாரணதிற்கு வெயில் அதிகம் உள்ள நண்பகல் நேரத்தில், ஒரு பிடி மண்ணை அள்ளி கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால், மண்ணில் உள்ள மொத்த வெப்பமும், கைகளில் இறங்குவதை உணர முடியும்.

tree water feed-water

இதே நிலை தான், மரம், செடி, கொடிகளுக்கும். நண்பகல் நேரத்தில் நீர் ஊற்றினால், மண்ணின் மொத்த வெப்பமும், வேர்களில் சென்று இறங்கும். அதனால் தான், முடிந்த வரையில் குளிர்ச்சியான நேரத்தில், நீர் பாய்ச்சுவார்கள். நண்பகல் நேரத்தில் தரை சூடாக இருக்கும். அப்போது வாய்க்கால் வழி நீரும் சூடாகியிருக்கும். இளம் பயிர்களை அந்நீர் வெம்பச்செய்துவிடும். பெரிய மரங்களின் பூக்களும் வெம்பிக்கொட்டிவிடும். மண்ணின் வெப்பம் நீர் மூலம் நுண்ணிய வேர்களுக்குச் செல்வதால், தாவரங்கள் வேரிலிருந்து பாதிப்படைகின்றன.

tree water feed-water

வீட்டில் மரம் வளர்ப்பவர்களுக்கு மட்டுமல்ல. விவசாயம் செய்பவர்களுக்கும் இதே வழிமுறை தான். நன்செய் நிலமாக இருந்தால் காலை நேரத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். புன்செய் நிலமாக இருந்தால், மாலை நேரத்திற்கு மேல் நீர் பாய்ச்ச வேண்டும். நன்செய் நிலம் என்றால், நீர் மிகுதியாக தேவைப்படும். அது வளர்க்க நன்றாக பக்குவப்படுத்தப்பட்ட நிலமாகும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு போன்ற பயிர்கள் இந்த நிலத்தில் வளரும். இதுவே புன்செய் நிலம் என்றால், ஓரளவுக்கு பக்குவப்படுத்தப்பட்ட நிலமாகும்.

tree water feed-water

வெங்காயம், சோளம், மா, தென்னை போன்றவை புன்செய் நிலத்தில் வளரும். இது தவிர மானாவாரி நிலம் என்ற ஒரு பகுதி இருக்கு. பருவ மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விளைச்சல் பார்க்க முடியும். கம்பு, சோளம், அவரை, துவரை, பயறு வகைகள், வேம்பு, புங்கு, வாதநாராயணன், கருவேலம் போன்றவை இந்த மாதிரியான நிலத்தில் வளரும். அடுத்து இறுதியாக வரும் தரிசுக்காடு ரொம்பவுமே மோசம். எப்போதாவது மழை பெய்தால், வருடம் ஒரு வெள்ளாமை வந்தாலே அது பெரிய விஷயம். இவை எல்லாமே நீர் பாய்ச்சும் முறையில் அடங்கியிருக்கு.