Out of Box

வாக்குபதிவு முடிந்தவுடன் கண்ட்ரோல் யூனிட்டை ஹேக் செய்து ஓட்டு எண்ணிக்கையை மாற்றி விட முடியுமா? எந்த வகையில் மோ சடி நடக்கலாம்? வழியில் கசிந்த உண்மை!

Apr 07 2021 10:42:00 PM

தேர்தல் ஆணையம் எத்தனை முறை அரசியல் கட்சிகளை அழைத்து உட்கார வைத்து பாடம் எடுத்தாலும், கடைசியில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி, தேர்தலுக்குப் பின் ஊரட‌ங்கு என்று நம்மூர் உருட்டுகள் அழிந்தபாடில்லை. வாக்குசீட்டு முறை இருந்த காலத்தில், மாலை நேரம் ஆனவுடன் எலக்சன் பூத்தை கைப்பற்றும் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறும். அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்பதால், சில கட்சிகள் வாக்களிக்கும் இயந்திர முறை வேண்டாம் என கதறுகின்றன. மற்ற நாடுகளின் வாக்கு பதிவு இயந்திரத்தை விட்டுத்தள்ளுங்கள்.

evm vote machine

ஒருமுறை இந்திய வாக்குபதிவு இயந்திரத்தின் நம்பக தன்மை குறித்து சந்தேகம் வந்த போது, அனைத்து கட்சிகள் முன்னரும் தேர்தல் ஆணையம் சோதனை செய்து காட்டியது. ஒருவராலும் எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. எந்த வகையிலும் வாக்குபதிவு இயந்திரை ஹேக் செய்ய முடியாது. பாதுகாப்பு சக்திகளை மீறி மோசடி செய்ய நினைத்தாலும், அடுத்தடுத்த பாதுகாப்பு கட்டமைப்புகள் காரணமாக ஏதாவது ஒரு இடத்தில் குட்டு உடைந்துவிடும்.

evm vote machine

உதாரணதிற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், நாம் நமது சின்னத்தை தேர்ந்தெடுத்த பின்னர் அருகில் உள்ள VVPAT எனப்படும் இயந்திரத்தில் நாம் அழுத்திய சின்னம் சரிதானா என்று பார்க்கும் வகையில் ஒரு அச்சுப் பிரதி தெரியும். அந்த காகிதத்தை  வாக்கு செலுத்தி முடித்த பின்னர் 7 நொடிகள் வரை கண்ணாடி வழியே பார்க்கலாம். ஒவ்வொரு வாக்கு முடிந்த பின்னும், தானே வெட்டிக் கொண்டு உள்ளேயே விழும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

evm vote machine

ஒரு வேளை மின்னணு வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக ஒரு வேட்பாளரோ, அவரின் முகவரோ ஆட்சேபம் எழுப்பினால் "தேர்தல் நடத்தை சட்டம் 1961", விதி எண் 56 D யின் கீழ் அந்த சீட்டுகளை, மி‌ன்னணு வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பிட எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அவர் விடுக்கலாம். அப்படி ஒரு கோரிக்கை எழுந்து, அது நியாயம் எனும் பட்சத்தில் VVPAT சீட்டுகளை எண்ணி சரிபார்க்க தேர்தல் அலுவலரே அனுமதிக்க முடியும். 

evm vote machine

இதனால் ஒருவேளை இயந்திரத்தில் மோசடி நடந்தால் கூட, VVPAT கருவி காட்டிக்கொடுத்துவிடும். வாக்குபதிவு முடிந்தவுடன் கண்ட்ரோல் யூனிட்டை ஹேக் செய்து ஓட்டு எண்ணிக்கையை மாற்றி விட முடியுமா? என்று பார்த்தாலும், மறுபடியும் எண்ணிக்கை பண்றப்ப டேலி ஆகனும். இல்லாட்டி ஒத்துக்க மாட்டாங்க. வோட் கவுண்டிங் மெஷின் ஒரு நவீன கால்குலேட்டா் போன்றதே. அதற்கு தேவையான மின்சாரம் கூட அதனுள் இருக்கும் பேட்டரி மூலமே அளிக்கப்படுகிறது. புற இணைப்புகள் எதுவும் இல்லை. மற்ற சாதனங்களை போல, எந்த நெட்வொர்க் கொண்டும் இணைக்க முடியாது.

evm vote machine

எந்த வகையிலும் ஏமாற்ற வழியில்லை. மின்னணு வாக்கு இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று நேரில் வந்து நிரூபிக்கும்படி, தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துக் காத்திருந்தது. அப்போது யாரும் சென்று அதை நிரூபிக்க முன்வரவில்லை. பல மாநிலத் தேர்தல்களிலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், இதே ஈவிஎம்மில் வென்றுள்ளன. தமிழகத்திலும், ஈவிஎம்மைக் குறைசொல்லும் கட்சிகளே கூட, பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. முன்பு, 2004-2014 வரை நடந்த ஆட்சியும் ஈவிஎம் மூலம் வந்தது தான்.

evm vote machine

விவிபேட் வந்த பிறகும் அதைக் குறை சொல்வது சரியில்லை. பழைய வாக்குப் பதிவு முறைபோலவே, சின்னங்களோடு துண்டுச் சீட்டுகள் பெட்டியில் விழுகின்றன. அவற்றை, கோர்ட்டின் பார்வைக்காக, பாதுகாக்கவும் செய்கிறார்கள். ஒவ்வொரு பூத்திலும், மாதிரி வாக்குப் பதிவு நடத்தி, ஏஜன்டுகள் முன்பாக, மிஷினில் உள்ள ஓட்டுகளும், துண்டுச் சீட்டுகளில் உள்ள ஓட்டுகளும், சின்னம் வாரியாக டேலியாவதை, தேர்தலன்று காலையிலேயே நிரூபிக்கிறார்கள்.

evm vote machine

ஓட்டு எண்ணும்போதும், குறிப்பிட்ட % பூத்களில், விவிபேட்டிலுள்ள சீட்டுகளை எண்ணுகிறார்கள். இதற்கு மேலும் சந்தேகப்படுபவர்கள், கோர்ட் மூலம், விவிபேட் சீட்டை எண்ண அனுமதி பெறவும் வழி உள்ளது. கால விரயத்தைத் தவிர்க்க, கள்ள ஓட்டைக் குறைக்க வந்துள்ள, ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை, இப்படி, படித்த பலரும் கூட எதிர்ப்பது, ரொம்பவே தவறு.