Spellbound

படத்தின் பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா? 45 வருடங்களுக்கு பிறகு அப்பா சென்டிமென்டை கையில் எடுத்துள்ள சூர்யா!

Jan 13 2022 12:35:00 PM

சூரரைப்போற்று, ஜெய் பீம் என இரண்டு மாறுபட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவை அ திரவைத்துள்ள சூர்யா எதற்கும் துணிந்தவன் படம் மூலம் மீண்டும் கமர்சியல் வட்டத்துக்குள் வந்துள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நாற்பதாவது திரைப்படமாக உருவாகி வருகிறது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமானால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதற்கும் வாய்ப்புள்ளது.

etharkum-thuninthavan surya-pandiraj-movie

வலிமை, RRR போன்ற படங்கள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது. சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டும் OTT தளத்தில் நேரடியாக வெளியாகின. ஆனால் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

etharkum-thuninthavan surya-pandiraj-movie

படத்தில் இடம்பெற்றுள்ள வாடா தம்பி மற்றும் உள்ளம் உருகுதய்யா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே எதற்கும் துணிந்தவன் படத்தை பற்றி ஒரு சுவாரசியமான விசயம் சமீபத்தில் தான் தெரிய வந்தது.

etharkum-thuninthavan surya-pandiraj-movie

இந்தப்படத்தின் டைட்டில் வித்தியாசமாகவும் அதே சமயத்தில் பிரமாதமாகவும் இருப்பதாக பலரும் தெரிவித்து வந்ததால் அதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது தான் சூர்யா அப்பா சென்டிமென்டை கையில் எடுத்துள்ளார் என்பது புரிய வந்தது. 1977ம் ஆண்டு சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதற்கும் துணிந்தவன் என்ற டைட்டிலில் ஒரு படம் நடித்துள்ளார்.

etharkum-thuninthavan surya-pandiraj-movie

கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்னர் வெளியான அந்தப்படம் குறித்து பலருக்கும் நியாபகம் இருக்காது. அந்தப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் படத்தின் டைட்டில் சூப்பராக இருக்கிறது. தன்னுடைய தந்தை படத்தின் டைட்டிலை தான் சூர்யா தன்னுடைய நாற்பதாவது படத்துக்கு கையிலெடுத்திருக்கிறார். அவருடைய தந்தை சென்டிமென்ட் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறதென்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.