Around me

ஏனுங்க, விஷயம் தெரியுமாங்க? நம்ம ஈரோடு பள்ளிக்கூடத்துக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கொடுத்துருக்காங்க!!

Nov 28 2021 02:12:00 PM

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்ற ஆசிரியை மாலா சமையல் கூடத்திற்கு ISO  சான்றிதழ் கிடைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.

erodegovschool iso

300 பேருக்கு உணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சமையல் கூடம் முழுவதுமாக டைல்ஸ் கொண்டு செப்பனிட்டும், வர்ணம் அடித்தும் சமையல் கூடத்தை அழகு படுத்தியுள்ளார்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, பெற்றோர்களிடம் இருந்து கல்விசீராக சமையல் கூடத்திற்குத் தேவையான எவர்சில்வர் மற்றும் அலுமினிய, மண் பாத்திரங்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து மாணவிகளுக்கு சுகாதாரமான முறையில் சமைக்கும் பொருட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஏற்படுத்தி அந்த நீரில் மட்டுமே சமைக்கவும் உத்தரவிட்டார்.

erodegovschool iso

காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் கொண்டு கழுவ உத்தரவிட்டுள்ளார். சமைக்கும் சமையலர் நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் போன்ற ஆபரணங்கள் அணிந்து இருக்கக்கூடாது. முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்இது மட்டுமல்லாமல் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒருநாள் பயன்படுத்தவும் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகளை சுடுதண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

erodegovschool iso

இவை அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள 2 சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனர்.

இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தை நான்குமுறை ஆய்வு செய்த ஐஎஸ்ஓ தரச்சான்று அதிகாரிகள் சுகாதாரமான முறையிலும்மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும்பணியாளர்களின் நேர்த்தியாளும், உணவின் சுவையும் சிறப்பான முறையில் இருப்பதால் கடந்த மாதம் ISO தரச் சான்றிதழ் வழங்கினர். தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு பள்ளியில் சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதற்காக உழைத்த அனைவருக்கும் தலைமையாசிரியை மாலா நன்றி தெரிவித்துள்ளார்.