HotPicks

ஃபிரிட்ஜ் வந்ததும் வீட்டுல இருக்க எல்லாத்தையும் தூக்கி ஃபிரிட்ஜில் வெச்சிட்ராங்க, ஆனால் எப்போதாவது முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமானு யோசித்ததுண்டா? இதனால் இவ்வளவு பிரச்சனைகள் வரும்னு தெரியுமா!

Jan 13 2022 08:21:00 PM

நாம் முட்டைகளை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் அறை வெப்பநிலையில் வைத்திருக்கப்படும் முட்டைகளை விட ஃபிரிட்ஜில் வைத்து பராமரிக்கப்படும் முட்டைதான் விரைவில் கெட்டுப் போய் விடுவதாகவும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைக்கும் போது அவை பால்போல திரிந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

egg fridge healthtips

முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரித்து பின்னர் அதை அறை வெப்பநிலைக்கு கொண்டு வரும் போது முட்டையின் மேல் ஓடு அதிகம் வியர்த்து விடுகிறது. முட்டையின் ஓட்டில் காணப்படும் சிறு துளைகள் வழியாக பாக்டீரியாக்கள் வேகமாக உள்புகுந்து வளர்ச்சியடைய ஆரம்பித்து விடும். எனவே முட்டை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் அறை வெப்பநிலையில் வைத்து பராமரித்து உண்ண வேண்டும்

நாம் வாங்கும் முட்டை புதியதாக இருந்து அதில் மேல் தோல் நீக்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால் அந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது.

egg fridge healthtips

கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானதே. இந்த பாக்டீரியா சாதாரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட நிலையில் தான் மிக விரைவில் பெருக்கம் அடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான  பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிகவும் பிரபலமான மேயோ கிளினிக் கூறுகையில் முட்டை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த பின்னர் இரண்டு மணி நேரம் வெளியில் இருந்தால் கூட அதை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளது. நீண்ட நாட்கள் முட்டையை ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலும் அதன் சுவையும் கேள்விக்குறியாகி விடும் என கூறுகின்றனர்.

egg fridge healthtips

இதுமட்டுமின்றி பிரிட்ஜில் உள்ள மற்ற உணவுப் பொருட்களின் வாசனை முட்டையின் ஓடு வழியாக ஊடுருவும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதால் இயல்பான ருசியானது பாதிக்கப்படும். முட்டையின் கரு உருவாவதைத் தடுக்க அதனை அவ்வப்போது அசைத்தல், இடம் மாற்றுதல்  போன்ற எளிய முறைகளை மேற்கொள்ளலாம் என கூறுகின்றனர்.