His & Her

நெஞ்சு பகுதி விம்மி இருக்க வேண்டுமாம்! பெற்றோரே முகம் சுளிக்கும் வகையில் ஆடை அணிந்தால் என்ன செய்வது? அ சிங்கமாகும் ஆடை சுதந்திரம்!

Apr 03 2021 02:49:00 PM

ஆடை சுதந்திரம் இருக்கலாம், அதில் தப்பில்லை. ஆனால் பெண் விடுதலைக்கும், ஆடை சுதந்திரத்திற்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல், சில பெண்கள் நடந்து கொள்வது, சங்கடத்தை ஏற்ப்படுத்துகிறது. ஆ! ஊன்னா! "துப்பட்டா போடுங்க தோழின்னு" சொல்லிக்கொண்டு வரும் ஆட்களை எல்லாம் கணக்கில் சேர்க்க வேண்டாம். ஆடை சுதந்திரத்தை ஆதரிக்கும் பலருக்கும், இன்றைய இளம் பெண்களின் உடை அணியும் பழக்கம் கொஞ்சம் நெருடலை உண்டாக்கி வருகிறது.

dress women men

அக்கா திருமணத்திற்கு துணி தைக்க வெளியில் கொடுத்திருந்தோம். அதை வாங்க கடைக்கு சென்ற போது, அளவு கொடுக்க வந்த இளம்பெண் ஒருவர், மற்ற அளவெல்லாம் அப்படியே இருக்கட்டும். இந்த அளவு மட்டும், இருப்பதை விட ஒரு இஞ்ச் குறைவாக வைத்துவிடுங்கள் என்றார். அப்படி தைத்தால், கழுத்துக்கு கீழே ரொம்ப டைட்டா இருக்குமே என்று துணி தைக்கும் ஆண்டி கூறியும், அப்படியே இருக்கட்டுமென பணத்தை கொடுத்துவிட்டு நடையை கட்டினார்.

dress women men

நிறைய பெண்கள் இப்படித்தான் வேண்டுமென கேட்கின்றனராம். அப்படி தைத்து வாங்கி அணிந்தால், நெஞ்சு பகுதி மட்டும் விம்மி தனியாக தெரியுமாம். இப்போதைய டிரெண்ட் இது தான் போலிருக்கு. இந்த மாதிரி ஆடை அணிந்தால், பெற்றோர்களுக்கே முக சுளிப்பை ஏற்ப்படுத்தும். அப்படி இருக்கும் போது, பொதுவெளியில் இருப்பார்களின் மனநிலையை யோசித்துப்பாருங்கள். பார்க்கும் பார்வையில் தான் குறை இருக்கிறது என ஏகவசனம் பேசவேண்டாம். பாதிக்கப்பட போவது நம்ம வீட்டு பெண்கள் தான்.

dress women men

பெண் அடிமைத்தனத்திற்கும், ஆடை கண்ணியத்திற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு, ஆபாச ஆடை அணிந்த பெண்களை எல்லாம் பாரதி கண்ட புதுமை பெண் என புகழக்கூடாது. தமிழில் கண்ணியம் என்றொரு அழகான வார்த்தை உண்டு. ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் முதலில் அதை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். சேலையை லட்சுமி கடாட்சம் நிறைந்திருப்பது மாதிரியும் உடுத்த முடியும், ஆபாசமாகவும் காட்ட முடியும். எந்த ஆடையாக இருந்தாலும், அது நாம் அணியும் முறையில் அதன் பார்வை வேறுபடுகிறது. எதிலும் கண்ணியத்தை கடைபிடித்தால், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.