HotPicks

#Mutton: ஆட்டுக்கறி சாப்பிடுவது போல, நாய் கறி சாப்பிட ஏன் எவரும் முன்வருவதில்லை?

Aug 01 2020

நம்ம ஊரைப்பொறுத்தவரைக்கும் நாய் பைரவர் சாமியாக பார்க்கப்படுகிறது. ஏதோ இங்கு சாமி முத்திரை குத்தப்பட்டதால், வெளியில் சுதந்திரமாக நடமாட முடிகிறது. இதுவே நாகலாந்து மாநிலத்தில், ஆட்டு இறைச்சியை போல, நாய் கறி தான் பிரதான உணவாம். இங்கு ஆடு, கோழி பண்ணையில் வளர்க்கப்படுவதைப்போல, சீனா, கொரியா நாடுகளில் நாய் பண்ணை வைத்து, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கிறார்கள். அங்கே அவர்கள் எப்படியோ தெரியவில்லை. நம்ம ஊரில், நாய்க்கறியை உட்கொள்ளாமலிருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

dog mutton chicken

ஆரம்பத்தில் இருந்தே குடும்பத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்பட்ட உயிரினம். வேட்டையாடி அலைந்து திரிந்த நாளில் இருந்து, நாய் நன்றியுள்ள இனமாக இருந்து வருவதால், அவற்றை உண்ண வேண்டும் என்ற உணர்வே, இங்கு எட்டிப்பார்க்கவில்லை. உண்மையாக சொல்லப்போனால், ஒரு மனிதனை பார்ப்பதை போன்ற உணர்வுடன் நாயை பாச உணர்வுடன் கொண்டாடுகிறோம். பெயர் வைத்து, கூடப்பிறந்த சகோதரன் போல கொஞ்சி மகிழ்கிறோம்.

dog mutton chicken

இப்படி உணர்வு ரீதியாக பார்த்து பார்த்து பழகிவிட்டதால், நாயை ஒரு உணவாக பார்க்கவே மனம் வருவதில்லை. நாய்க்கு வெறி பிடிக்கும், சில நேரங்களில் சாக்கடைக்குள் இறங்கி ஒரு ஆட்டம் போட்டுவிட்டு மேலே ஏறும். எப்போ பார்த்தாலும் நாக்கை தொங்கப்போட்டு, சலவாய் ஒழுக்கிக்கொண்டே செல்லும். பார்க்கவே அருவருப்பாக இருக்கின்ற காரணத்தினால், அதனை உணவாக பார்க்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.

dog mutton chicken

நாம் பிரியாணி சாப்பிட்டு மீதி போட்டால் பிரியாணி சாப்பிடுகிறது. மீன் போட்டால் மீனையும் சாப்பிடும். மீந்து போன பழைய சாதம் போட்டால் அதையும் சாப்பிடும். எல்லாமே நம்மைப்போல சாப்பிடுவதால், வாய் பேசாத நம் இனம் என்ற உணர்வு வந்துவிடுகிறது. சீனாவில் நாய் கறி சாப்பிடுகிறார்கள் என்றால்,  இதில் தவறு என்று எதுவும் சொல்ல முடியாது. அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் சாப்பிடுகிறார்கள் அவ்வளவுதான். ஒருவர் சாப்பிடும் உணவை வைத்து, அவர்களை குறை சொல்ல முடியாது.