HotPicks

#WoW: பைசா செலவில்லாமல் சாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக எப்படி மாற்றலாம்?

Mar 18 2020

இந்திய DTH தொலைக்காட்சி சேவையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் கூடிய செட்டாப்பாக்ஸ்களை சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது டிஷ் டிவி நிறுவனமும் தனது ஆண்ட்ராய்ட் செட்டாப்பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. D2H ஸ்ட்ரீம் என்ற பெயரில் அமைந்த இந்த செட்டாப் பாக்ஸின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிடிஎச் சேனல்கள் பார்ப்பதுடன் இதில் மொபைல் அல்லது பிராட்பேண்ட் இணையத்தைப் பயன்படுத்தி பிரௌசிங், வீடியோ மற்றும் கேம் ஆப்களைப் பயன்படுத்த முடியும். இந்த HD செட்டாப்பாக்சில் ஆண்ட்ராய்ட் 9 இயங்குதளம், கூகுள் பிளே ஸ்டோர் வசதியுடன் கிடைக்கிறது. இணைய வீடியோ தளங்களான அமேசான் பிரைம், வூட், ​ஜீ5, யூடியூப் ஆகிய வீடியோ தளங்களைப் பார்க்க முடியும்.

இந்த செட்டாப்பாக்ஸ் பயன்படுத்தி சாதாரண டிவிக்களையும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவி போல மாற்றிக் கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற வசதி மற்றும் விலையில் போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் தனது எக்ஸ்ட்ரீம் ஆண்ட்ராய்ட் செட்டாப்பாக்ஸை விற்பனை செய்து வருகிறது.

Top