Hugs & Kisses

#OMG : மச்சான் அந்த ***லிங்க் சென்ட் பண்றா Vs மச்சான் பிசிக்ஸ் புக் PDF லிங்க் சென்ட் பண்றா

Feb 13 2020

கிரி கணபதிக்கு யூடியூப் என்றால் கொள்ளை பிரியம். எந்த மாதிரியான ஸ்கிரிப்ட் எழுத சொன்னாலும், சரசரவென எழுதி கையில் கொடுத்து விடும் அசாத்திய திறன் கொண்டவர். என்னங்க, எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி தர முடியுமா என்று நான் கேட்க, "உனக்கு இல்லாததா தம்பி" என்றவாறே பேனாவை கையில் எடுத்தார். சரிங்க அண்ணா, "இந்த உலகத்தில் இரண்டு வகையான மக்களின் மன நிலை எப்படி இருக்கும்.?" இந்த தலைப்புக்கு உங்களால எழுத முடியுமா என்று கேட்ட மாத்திரத்தில், எழுத ஆரம்பித்தார். ஐந்தே நிமிடத்தில் பேப்பரை கையில் நீட்டியதும், எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னடா எழுதியிருப்பார் என்று படிக்க ஆரம்பித்தேன். அதை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.

your image

#1. பணம் தான் முக்கியம்.

பாசம் தான் முக்கியம்.

#2. மச்சான் பிசிக்ஸ் புக் பிடிஎஃப் லிங்க் சென்ட் பண்றா.

மச்சான் அந்த *** லிங்க் சென்ட் பண்றா.

#3. நான் சாப்பிட போறேன்

வா சாப்பிட போலாம்.

#4. நான் நல்லா இருந்தா போதும்

நாம எல்லாரும் நல்லா இருக்கலாம்

#5. இந்த உலகம் ஏன் இப்படி இருக்கு?

இந்த உலகத்தை நாமதான் மாத்தணும்.

#6. எல்லாம் பண்றதையே நீயும் பண்ணிட்டு போ.

எல்லோரும் பண்றதையே தான் நீயும் பண்ணணுமா?

#7. படிப்பு தான் முக்கியம்

திறமைதான் முக்கியம்

#8. அப்புறம் பண்ணிக்கலாம்.

முதல்லயே பண்ணி இருக்கலாம்.

#9. படிச்சு முடிச்சதும் வேலைக்கு போகணும்.

படிச்சு முடிச்சதும் 10 பேருக்கு வேலை கொடுக்கணும்.

#10. சார், நீங்க சொல்றது தப்பு.

சார், நீங்க எது சொன்னாலும் சரியாதான் இருக்கும்.

#OMG: இப்படி பல வகையான மக்களின் இரட்டை மன நிலையை இரண்டே வரிகளில் சிம்பிளாக சொல்லியிருக்கிறார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top