Around me

இந்த ஆண்டு IPL தான் தோனியின் கடைசி தொடரா? இந்த பதிலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

Apr 08 2021 07:03:00 PM

இந்த ஆண்டுக்கான IPL தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. கடந்த வருடத்தை போல இந்த வருடமும் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானமாகவே போட்டிகள் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியை நாளை மறுதினம் விளையாட உள்ளது. சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி செயல்பட்டு வருகிறார்.

csk ipl dhoni final

இதுவரை அவர் இருபது ஓவர் world cup, ஐம்பது ஓவர்  world cup, சாம்பியன்ஸ் ட்ரோபி என அனைத்து வகையான கோப்பைகளையும் இந்திய அணிக்காக வாங்கிக்கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று முறை கோப்பை வாங்கிக் கொடுத்தவரும் டோனி தான். தோனிக்கு வயதாகிவிட்டதால் இனி அவர் IPL போட்டிகளில் விளையாடமாட்டார் என்று பேசப்பட்டது.

csk ipl dhoni final

ஆனால் கடந்த வருடமே அவர் நான் அடுத்த வருட IPL போட்டிகளில் விளையாடுவேன் என்று அறிவித்துவிட்டார். தற்போதும் இதுதான் டோனியின் கடைசி IPL தொடர் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் மனம் திறந்துள்ளார். இது தான் தோனியின் கடைசி IPL தொடர் என்று மட்டும் நினைக்க வேண்டாம். தோனி IPL தொடரில் தொடர்ந்து விளையாடுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அவர் விரும்பும் வரை அவர் சென்னை அணிக்காக  விளையாடலாம் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட சென்னை ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்க தொடங்கிவிட்டனர்.

csk ipl dhoni final